அது எவ்ளோ தூரம் படிச்சுட்டு வருது, அதைப் போயி வீட்டுல வேலை செய்யச் சொல்றீயேம்மா?னு கேப்பார்

By subhashini · 5/12/2024

தன்னுடைய அக்கா செய்த சாதனையை பாராட்டி சிவகார்த்திகேயன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும், கடுமையான உழைப்பினாலும் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த அமரன் படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அமரன் படம்:

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து இருக்கிறது. இதை அடுத்து தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதன் சிவா அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு, சிபி சக்கரவர்த்தி இயக்கும் படம் என்று பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய அக்காவிற்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் அக்கா சாதனை:

சிவகார்த்திகேயனின் அக்கா கௌரி மனோகரி அவர்கள் மருத்துவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் தன்னுடைய 42 வயதில் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன் பெல்லோஷிப்பை(RCPF) வாங்கி இருக்கிறார். RCPF என்பது இங்கிலாந்து மருத்துவ நிபுணத்துவ ஒழுங்குமுறை அமைப்பான GMC -ன் முதுநிலை என்ற தகுதி. இந்த பட்டம் பெற்றவர் இங்கிலாந்தில் மருத்துவ பயிற்சி மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதற்காக சிவகார்த்திகேயன் போட்ட பதிவில், என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனான என் அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

View this post on Instagram

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

சிவகார்த்திகேயன் பதிவு:

கையில் குழந்தையுடன் நீங்கள் எம்பிபிஎஸ் முடித்தது, 38 வயதில் எம்டி முடித்தது, இப்போது 42 வயதில் RCPF பெற்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எல்லா தடைகளையும் கடந்துள்ளீர்கள். அப்பா நிச்சயமாக பெருமைப்படுவார். மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்போதும் அக்காவின் பக்கம் நிற்பதற்காக மிக்க நன்றி அத்தான் என்று பதிவு போட்டு இருக்கிறார். மேலும், கௌரியின் கணவர் பிரசன்னா திருச்சியில் பிசினஸ் செய்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய படிப்புக்கு சிவகார்த்திகேயன் ரொம்பவே உறுதுணையாக இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் அக்கா பேட்டி:

இது தொடர்பாக பேட்டியில் கூட ஒரு முறை கௌரி, என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் என்னை படிக்க சொல்லி ரொம்பவே என்கரேஜ் பண்ணுவார். சென்னையில் தான் மூன்று வருஷம் படித்தேன். படித்து முடித்து வரும்போது அம்மா வீட்டு வேலை ஏதாவது செய்ய சொன்னாங்கனா, அது அவ்வளவு தூரம் படித்துவிட்டு வருகிறது. அதை போய் வீட்டு வேலை செய்ய சொல்றியே மா என்று அம்மாவிடம் கோபப்பட்டு பேசுவார். அதைவிட முக்கியமாக என்னை கஷ்டப்படுத்தக் கூடாது என்று வீட்டு வேலைக்கு ஆள் போட்டார். கார் ஓட்ட டிரைவர் எல்லாம் அனுப்பி வைத்தார். தம்பி மட்டும் என்னை இந்த அளவுக்கு கேர் எடுத்து பார்த்துக் கொள்ளவில்லை என்றால் நான் கவனம் செலுத்தி எம்.டி முடித்திருக்க முடியாது. அதுவும் எம்.டி படிப்பில் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்து கோல்டு மெடலும் வாங்கினேன் என்று கூறி இருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full