பராசக்தி டைட்டில் விவகாரம் - ஆதாரத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி. AVM நிறுவனம் விளக்கம்

By subhashini · 29/1/2025

விஜய் ஆண்டனி- சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ 'ஹிட்லர்' போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ககன மார்கன். இந்த படத்தினுடைய வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது அடுத்து அக்னி சிறகுகள் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். ஆனால், இந்த படத்தினுடைய வேலைகள் தாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது.

விஜய் ஆண்டனி படம்:

இப்படி இருக்கும் நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தினுடைய போஸ்டர் தான் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே நடித்து தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை அருண் பிரபு இயக்கி இருக்கிறார். இதற்கு தமிழில் சக்தி திருமுருகன் என்று பெயரிட்டு இருக்கிறார். ஆனால், தெலுங்கு உட்பட பிற மொழிகளில் பராசக்தி என்று பெயரிட்டு இருக்கிறார்கள். பேன் இந்திய மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

விஜய் ஆண்டனி பதிவு:

கோடை விடுமுறையில் தான் இந்த படம் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இன்று மாலை தான் சிவகார்த்திகேயனுடைய 25 ஆவது படமான பராசக்தி படத்தின் உடைய போஸ்டரும் தான் அறிவிக்கப்பட்டது. தற்போது இதுதான் சோசியல் மீடியாவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பேருக்குமே இது 25வது படம் தான். இந்நிலையில் இது தொடர்பாக விஜய் ஆண்டனி பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், தெலுங்கில் பராசக்தி என்ற தலைப்பை கடந்த ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்திருக்கிறேன்.

ஏவிஎம் நிறுவனம் பதியூவ்:

அதற்கான சான்றிதழையும் இணைத்து இருக்கிறார். இதை எடுத்து நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியாகியிருந்த பராசக்தி படத்தை தயாரித்த ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தினுடைய தலைப்பை சிவகார்த்திகேயன் படத்திற்கு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து விஜய் ஆண்டனி- சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பராசக்தி படம்:

தற்போது சிவா அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் sk25 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை Dawn Pictures and Red Giant Movies Pictures and தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பூஜை நடைபெற்றிருந்தது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகப் பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘பராசக்தி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full