கேலி செய்யும் ஷாருக்கான், தட்டிக்கொடுக்கும் தளபதி - பாலிவுட் Vs கோலிவுட். இந்த வீடியோவை பாருங்க.

By Rajkumar · 19/6/2020

கடந்த சில தினங்களாக ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சி ஆழ்த்திய சம்பவம் என்றால் அது பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தான். இதை தான் ஒட்டுமொத்த இந்தியாவும் பரபரப்பாக பேசி கொண்டு உள்ளது. சுஷாந்த் சிங்க்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சுஷாந்த் சிங் மரணம் குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வந்து கொண்டு இருக்கின்றன.மேலும், பாலிவுட்டில் நிலவும் நெபோடிஸம் தான் காரணம் என்றும் பேசப்படுகிறது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு மன ஆழுத்தங்கள் தான் காரணம் என கூறி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் மற்றும் கோலிவுட் இரண்டையும் சம்மந்தப்படுத்தி சுஷாந்த் மன அழுத்தத்திற்கு மீம் ஒன்றை உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். இளம் நடிகராக வளர்ந்து வரும் சுஷாந்த்தை விருது விழா ஒன்றில் முன்னணி நடிகராக திகழும் ஷாருக் கான் மேடையில் கிண்டலடித்து அவமானப்படுத்துகிறார்.

ஆனால், கோலிவுட்டில் அதே போல் சிவகார்த்திகேயன் தனது திரையுலக பணயத்தில் முதன் முறையாக ஒரு விருது வாங்கும் பொழுது அவரை முன்னணி நடிகரான தளபதி விஜய் தோலில் தட்டி கொடுத்து வாழ்த்துகிறார். இப்படி நெட்டிசன்கள் உருவாக்கிய மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தற்போது இந்த மீம் பாலிவுட் திரையுலகை கேள்வி கேட்டு வருகின்றனது. பொதுவாகவே பிரபல நட்சத்திரங்கள் சினிமா உலகில் தனக்கு பிறகு தங்கள் பிள்ளைகளையே பெரிய நடிகர்களாக உருமாற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=wVet1DV8SUM

இந்த நிலை இந்தியா முழுவதும் நடைபெற்று வருவகிறது. சினிமாவில் இருப்பவர்கள் மட்டுமே சினிமாவில் வளர வேண்டும் எனவும், புதிதாக யார் வந்தாலும் அவர்களை அசைத்துப் பார்ப்பது தான் அவர்களுக்கு வேலை என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இந்த நிலைமை மாற வேண்டும். திறமை உள்ளவர்களுக்கு எங்கு சென்றாலும் இடம் உண்டு என்பதை ஏற்படுத்த வேண்டும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full