நடிகர் பாலாவின் செயலால் கடுப்பாகி எல்லோர் முன்பும் சிவகார்த்திகேயன் எச்சரித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, இவர் , தொகுப்பாளர், சிங்கர், என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் டாக்டர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவி தான் அயலான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Advertisement

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

அதோடு இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் தெலுங்கு படம்:

பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது.

Advertisement

டான் படம் பற்றிய தகவல்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் சிவா காலேஜ் ஸ்டூடன்டாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் மே 13ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. ஆகவே இன்னும் சில தினங்களில் படம் வெளியாக இருப்பதால் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ரொம்ப பிஸியாக இருக்கிறது.

Advertisement

பாலாவை எச்சரித்த சிவா:

அந்த வகையில் அண்மையில் நடந்த டான் பட புரமோஷன் விழாவில் படக்குழு கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது படக்குழு மேடையில் நின்று புகைப்படத்திற்காக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், நடிகர் பாலா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் சிவகார்த்திகேயன் கடுப்பாகி அவரை கூப்பிட்டு வாயில் கை வைத்து அமைதியாக இருக்கும்படி எச்சரித்திருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement