அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகன் - தன் அம்மா பிறந்தநாளில் நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்

By subhashini · 8/5/2025

தன்னுடைய தாயின் 70 வது பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடும் உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டு இருந்தது.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

இதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘Dawn Pictures and Red Gaint movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் விவகாரம் சர்ச்சையாகி இருந்தது. பின் அந்த பிரச்சனை முடிந்து இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் அம்மா பிறந்தநாள்:

இதை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்புகளுமே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் இன்னும் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்காக சிவகார்த்திகேயன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சிவகார்த்திகேயனின் அம்மா ராஜிதாஸ் அவர்கள் இன்று 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதற்காக சிவகார்த்திகேயன் ஸ்பெஷல் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by JayaPlusChannel (@jayaplusnews)

சிவகார்த்திகேயன் பதிவு:

அதில் அவர், அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே. அதை நீயே தருவாயே, "அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே" என்று கூறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், சிவகார்த்திகேயன் தன்னுடைய அம்மா மீது அதிக அன்பும், மரியாதையும் கொண்டிருப்பவர் என்பது பல பேட்டிகளின் மூலம் நாம் அனைவரும் அறிந்ததே.

சிவகார்த்திகேயன் அம்மா:

சிவகார்த்திகேயனுடைய 17 வயதிலேயே அவருடைய அப்பா இறந்துவிட்டார். அவருடைய அம்மா ராஜி தான் குடும்ப பாரத்தை ஏற்று தன்னுடைய பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொண்டார். தன்னுடைய சகோதரரிடம் கடன் வாங்கி தான் சிவகார்த்திகேயனிடம் படிக்க வைத்தார். சிவகார்த்திகேயன் மீடியாவிற்குள் நுழைந்தபோது ஆரம்பத்தில் அவருடைய குடும்பம் அவருக்கு பெரிதாக சப்போர்ட் செய்யவில்லை. இருந்தாலுமே சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்தின் மீது கோபத்தை காமிக்கவில்லை. தற்போது சிவா உடன் தான் அவர் அம்மா இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full