சிம்பு படத்தில் அசிஸ்டன்ட்டாக வேலை செய்துள்ள சிவகார்த்திகேயன் - ஆனால், அந்த படம் ?

By Rajkumar · 23/12/2020

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி மூலம் தான் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவில் அறிமுகமானது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தான். அதற்குப் பின்னர் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் படி படியாக உழைத்து முன்னேறி இந்த அளவிற்கு சினிமா உலகில் முன்னேறி உள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர்.

https://www.youtube.com/watch?v=LxFTk3O_7aI&feature=emb_title

மேலும், தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். எனவே, சிவகார்த்திகேயன் அறிமுகமானது 3 படத்தில் தான் என்றும் சிலர் கூறுவதும் உண்டு. அட அவ்வளவு எங்க நம்ம தல நடித்த ஏகன் படத்தில் கூட சிவகார்த்திகேயன் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார். ஆனால், ஹீரோவாக அறிமுகமாகி இருக்க வேண்டியது என்னவோ குறள் 786 என்ற பதில் மூலம் தான் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது.இந்த படத்தை இயக்கியது வேறு யாரும் இல்லை நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தான்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதே போல இயக்குனர் நெல்சன் தற்போது தளபதி 65 படத்தையும் இயக்க இருக்கிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தின் கதை சிம்புவிற்கு எழுதப்பட்ட வேட்டை மன்னனின் கதை என்றுதான் கூறப்படுகிறது மேலும் இந்த கதையை விஜய்க்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே இவர் அஜித்தின் ஏகன் படத்தில் கூட ஒரு சிறு காட்சியில் நடித்திருப்பார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த சிவகார்த்திகேயன், நான் முதலில் படப்பிடிப்பிற்கு சென்றவுடன் சற்று பதட்டமாக இருந்தேன். அவருக்கு திரையில் ஏன் இவ்வளவு வரவேற்ப்பு என அஜித் சாரை பார்த்ததும் தான் தெரிந்தது. அப்படி ஒரு தேஜஸ் அவரது முகத்தில். நான் பதட்ட மாக இருந்ததை அறிந்த அவரே என்னிடம் வந்து பேசினார்.நாம் என்ன செய்கிறோம் என்பதையும் தெரிந்து வைத்திருப்பார் அஜித். நாம் நன்றாக வாழ்கிறோமா என்பதை எல்லாம் விசாரிப்பார். என்னிடமும் வீட்டில் எல்லாம் என்ன செய்கிறார்கள்? வாழ்க்கை நன்றாக போகிறதா? பணத்தை சேர்ர்த்து வையுங்கள், அது மிக முக்கியம், அதிகமாகி சேர்த்தால் மற்றவர்களுக்கு உதவியும் செய்யுங்கள் எனக் அன்புடன் விசாரித்தார் என்று கூறி இருந்தார் சிவகார்த்திகேயன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full