அடப்பாவீங்களா, நீங்கெல்லாம் நல்லா இருப்பீங்களா - கார்த்தி மகள் பள்ளியை திட்டி தீர்த்த சிவகுமார்.

By Arun · 20/7/2023

கார்த்தி குழந்தையின் பள்ளி கட்டணம் குறித்து மேடையில் சிவகுமார் ஆவேசமாக பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சிவகுமார். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். மேலும், சிவகுமார் அவர்கள் மிகச் சிறந்த ஓவியர் என்பது பலர் அறியாத ஒன்று. சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் பல்வேறு சிரியல்களில் நடித்துள்ளார்.

மேலும், இவர் சினிமா உலகில் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகிறார். இவர் கல்வி கற்க முடியாத நிலையில் வாழ்க்கையில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி போன்ற பல நற்பணிகளை செய்து கொண்டு வருகிறார். இதை எல்லாம் இவர் அகரம் அறக்கட்டளை மூலம் செய்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

அகரம் அறக்கட்டளை :

அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த கல்வி நிறுவனர் சிவகுமார் ஆவார். தற்போது நடிகர் சூர்யா இருக்கிறார். இதற்கு சினிமா பிரபலங்கள் சார்பாகவும், அரசியல் சார்பாகவும் பலர் இந்த அகரம் அறக்கட்டளைக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இதை ஏற்கனவே சிவக்குமார் அவர்கள் பல வருடங்களாக செய்த நிலையில் நடிகர் சூர்யாவும் இதை எடுத்து செய்து வருகிறார். சமுதாயத்தின் பின் தங்கி உள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களை தேடி சென்று படிக்க நிதி உதவி வழங்க பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார் நடிகர் சூர்யா.

https://www.youtube.com/watch?v=au3druIIuuE

44 வது சிவகுமார் கல்வி விருதுகள் :

இதில் பல பேர் தற்போது நல்ல வேலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக 44 வது அகரம் அறக்கட்டளை விருதுகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த அறக்கட்டளை தொடங்கி 44 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறக்கட்டளையின் மூலம் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நிறைவு விழா நடந்து இருக்கிறது.

நிகழ்ச்சியில் சிவகுமார் சொன்னது:

இந்த விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கி இருக்கிறார்கள். இந்த விழாவில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி கலந்து கொண்டிருந்தார்கள். பின்னர் மேடையில் சிவகுமார் கூறியது, எங்கள் அம்மா என்னுடைய படிப்பிற்காக அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். பள்ளி படிப்பை முடித்துவிட்டு நான் ஹை ஸ்கூல் போனேன். காமராஜர் எல்லாம் அப்போது எங்களுக்கு உதவி செய்யவில்லை. கட்டணம் கட்டி தான் படித்தோம்.

ஆவேசமாக சிவகுமார் பேச காரணம்:

நான் ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் வரையும் மொத்தமே 850 ரூபாய் தான் ஆனது. ஆனால், தற்போது கார்த்தியின் மகள் ப்ரீகேஜி படிக்கிறார். எல்கேஜும் இல்லை யுகேஜியும் இல்லை. ப்ரீ கேஜி படிப்பதற்கு 2.5 லட்சம் ஆகிறது. இத்தனைக்கும் ப்ரீ கேஜில் எந்த படிப்பும் சொல்லித் தர மாட்டார்கள். ஒண்ணுக்கு,ரெண்டுக்கு தான் போவார்கள். இதுக்கு ரெண்டு லட்சமா? அடப்பாவிங்களா நல்லா இருப்பீங்களா என்று ஆவேசத்துடன் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full