ரஜினியுடன் சேர்ந்து படத்தில் நடிக்கிறேனா? சிவராஜ்குமார் சொன்ன 'ஜெயிலர் 2' அப்டேட்
ஜெயலர் 2 படம் தொடர்பாக கன்னட நடிகர் சிவராஜ் குமார் கொடுத்திருக்கும் அப்டேட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் நடிப்பில் ஹிட் தான். அந்த வகையில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை அடுத்து ரஜினி அவர்கள் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வரிசையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன்லால் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள்.
ஜெயிலர் படம்:
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார். குறிப்பாக, இந்த படத்தில் நடிகர் யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகளும் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருந்தது. இந்த படம் குறித்து யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து இருந்தார்கள். அதோடு இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்தார் என்று சொல்லலாம். இந்த படம் இதுவரை உலக அளவில் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்ததாக கூறப்பட்டது.
ஜெயிலர் 2:
மேலும், ரஜினிகாந்த் திரை வாழ்க்கையிலேயே இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இதனால் பலரும், ஜெயிலர் 2 படம் வருமா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். அதற்கு ஏற்ப சமீபத்தில் ஜெயிலர் 2 படம் வரும், அதற்கான வேலைகளில் நெல்சன் ஈடுபட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சிவராஜ்குமார் பேட்டி:
இவருடன் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது தமிழக-கேரளா எல்லையில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், மிர்னா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் படமாக்கி வருகிறார்கள். இந்த இரண்டாம் பாகத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தது
மேலும், முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இரண்டாம் பாகத்தில் நடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கின்றது.
படம் பற்றி சொன்னது:
இப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் 2 படம் தொடர்பாக முதல் பாகத்தில் நடித்த நடிகர் சிவராஜ்குமார்
சமீபத்தில் கலந்த நிகழ்ச்சியில், ஜெயிலர் 2 படத்தில் எனக்கான காட்சிகள் சூட்டிங் சீக்கிரமாகவே தொடங்க இருக்கிறது. முதல் பாகத்தில் ஒரு சின்ன ரோலில் தான் நடித்திருந்தேன். நெல்சன் முழு கதையுமே சொன்னார். அதெல்லாம் தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். ரஜினிகாந்த் சார் இந்த படத்தில் நடிக்கிறார் என்பதால் தான் நான் நடித்தேன். அதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு எனக்கு கிடைத்ததற்கான காரணம் தெரியவில்லை. என் நண்பர்கள் எல்லாம் அழைத்து என்னை பாராட்டியிருந்தார்கள். ஆனால், நான் ஒரு சிகரெட்டுடன் தான் நடந்து வந்தேன். வேறு எதுவுமே பண்ணவில்லை, என்னுடைய மனைவி கூட, அப்படி என்ன நீங்கள் இந்த படத்தில் செய்தீர்கள் என்று கேட்டார். இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததற்கு நெல்சன் சாருக்கு தான் நன்றி சொல்லணும் என்று கூறியிருக்கிறார்.