ரஜினியின் ஜெயிலர் 2ல் நான் ரொம்ப நேரம் வருவேன் - நடிகர் சிவராஜ்குமார் ஓபன் டாக்
ஜெயிலர் 2 படம் பற்றி சிவராஜ்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட மொழியில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவராஜ் குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 45.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் உபேந்திரா நடித்திருக்கிறார். இந்த படத்தை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தான் இயக்கி இருக்கிறார். அதேபோல் ராஜ் பி. ஷெட்டி இந்த படத்தில் முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் ஜெயிலர் 2 படம் தொடர்பாக சிவராஜ்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவராஜ்குமார் பேட்டி:
அந்த பேட்டியில் சிவராஜ்குமார் கூறியது, படத்தில் ஒரு நாள் நடித்து முடித்து விட்டேன். அடுத்த நாள் ஜனவரியில் மூன்று நாட்கள் இருக்கிறது. ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாகவே ஜெயிலர் 2 படத்துடைய தொடர்ச்சி தான் இந்த கதையும் உருவாக்கி இருக்கிறார்கள். முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது எனக்கு கதாபாத்திரம் இன்னும் அதிக நேரம் வரும் என்று கூறியிருக்கிறார்.
படம் பற்றி சொன்னது:
தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், சுனில், போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள்.
ஜெயிலர் 2 படம்:
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவராஜ்குமார் மோகன்லால் ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு வித்யா எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இந்த படம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.