தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக இருந்து பின்னர் நடிகர்களாக மாறியவர்கள் பல பேர் இருக்கின்றனர். அதில் எஸ் ஜே சூர்யா ஒரு சிறப்பான இயக்குனர் மற்றும் நடிகரும் கூட. இன்று ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வரும் எஸ் ஜே சூர்யா ஆரம்பத்தில் துணை இயக்குனராக தான் பணியாற்றினார். 1993 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கிழக்கு சீமையிலே. இந்தப்படத்தில் நெப்போலியன், விஜயகுமார், ராதிகா, விக்னேஷ் பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப்படம் முற்றிலும் கிராமப்புற மண்வாசனையை நமக்கு திரும்ப நினைவுக்கு கொண்டு வந்த படமாகும்.

இந்த படத்தின் ஒரு சில காட்சியில் நடித்து இருப்பார் எஸ் ஜே சூர்யா. ஆனால், சினிமாவில் வருவதற்கு முன்னர் எஸ் ஜே சூர்யா என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ? சென்னை லயோலா கல்லூரியில் தனது பட்டபடிப்பை முடித்த எஸ் ஜே சூர்யா, சினிமாவில் கதாநாயகனாக வலம் வர வேண்டும் என்று வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். அதுவரை தனது செலவிற்காக ஹோட்டலில் வேலை பார்த்தபடியே பல சினிமா இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்துள்ளார்.

Advertisement

அதன் பின்னர் இயக்குனர் பாக்கியராஜ், பாரதி ராஜா போன்ற இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்படியே ஒரு சில படங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்திலும் நடித்து வந்துள்ளார்.அதன் பின்னர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறியுள்ளார்.இந்த படத்தில் ஒரு ஆட்டோ ஓடுனாராக கூட ஒரு காட்சியில் நடித்து இருப்பார்.

ஆசை படத்தில் எஸ் ஜே சூர்யா

ஆசை படத்தின் போது எஸ் ஜே சூர்யா சொன்ன அந்த அந்த கதை அஜித்திற்கு பிடித்து போக “வாலி ” என்ற பெயரில் அந்த படத்தை எடுத்தார். வாலி திரைப்படத்தின் போது இவரிடம் பைக் கூட இல்லை. இதனால் என் இயக்குனர் நடந்து வரக்கூடாது என்று அஜித் இவருக்கு ஒரு புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுத்தார். வாலி படம் ஹிட் ஆனதும் கார் ஒன்றை வாங்கி கொடுத்தார் அஜித்.

Advertisement

எஸ் ஜே சூர்யாவின் வாலி,விஜய்யின் குஷி போன்ற படங்களுக்குப் பிறகு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நியூ, அன்பே ஆருயிரே, படங்களை நடித்தும், தயாரித்தும் உள்ளார். மேலும்,நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை என்ற படத்தை அவரே எழுதியும், இயக்கியும், இசையமைத்தும் நடித்துள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது. தற்போது மாநாடு படத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா

Advertisement
Advertisement