முதன் முறையாக தன் தந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட எஸ் ஜே சூர்யா - இறைவி படத்துல பாத்தா மாதிரியே இருக்காரே.
தமிழ் சினிமாவில் உலகில் மிக பிரபலமான நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து வாலி, குஷி போன்ற பல படங்களை இயக்கி உள்ளார். பின்னர் சிறிது காலம் சினிமாவில் இருந்து இவர் பிரேக் எடுத்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இசை என்ற படத்தை எழுதியும், இயக்கியும், இசையமைத்தும் நடித்து இருந்தார் .
பின் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாஅவர்கள் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.,எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இயற்பெயர் எஸ்.ஜஸ்டின்.செல்வராஜ் ஆகும். இவர் சினிமா உலகில் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளில் பன்முகங்களை கொண்டவர்.
இதையும் பாருங்க : சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதை அளிக்காத ஜெயலலிதா. மேடையிலேயே சுட்டிக்காட்டிய ரஜினி
இவர் தமிழ் சினிமா திரை உலகில் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். மேலும்,சூப்பர் ஹிட் படங்களான வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியவர்.அதோடு சூர்யாவின் வாலி,விஜய்யின் குஷி போன்ற படங்களுக்குப் பிறகு நடிகர் எஸ்.ஜே.சூர்யா நியூ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரமெடுத்தார். இந்த படம் அப்போதே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் சினிமாவில் ஒரு நடிகராகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த இறைவி திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் எஸ் ஜே சூர்யாவின் தந்தையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அவரது தந்தை 'இறைவி' படத்தில் வந்த எஸ் ஜே சூர்யாவை போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.