கதை சொன்னதுமே விஜய் சார் கொடுத்த ரியாக்ஷன் இருக்கு பாருங்க - இயக்குனர் எஸ்.ஜே சூர்யா சொன்ன விஷயம்
விஜய்யின் குஷி ரீ ரிலீஸ் பற்றி இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக பிரபல முன்னணி நடிகர்களின் படங்களை ரீ ரீலீஸ் செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆனது.
இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. கில்லி படத்தை தொடர்ந்து தற்போது 25 வருடங்களுக்குப் பிறகு விஜயின் குஷி படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இயக்குனர் எஸ்.ஜே சூர்யா சூர்யா இயக்கத்தில் 2000 ஆண்டு வெளியாகியிருந்த படம் குஷி.
குஷி படம்:
இந்த படத்தில் விஜய், ஜோதிகா, நிழல்கள் ரவி, விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு தேவா இசையமைத்து இருந்தார். த படத்தை ஏ எம் ரத்னம் தயாரித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதோடு இந்த படம் எஸ் ஜே சூர்யாவிற்கு மட்டும் இல்லாமல் விஜய்க்குமே ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்திருந்தது. ந்நிலையில் இந்த படத்தினுடைய மறு வெளியீட்டிற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
எஸ்.ஜே.சூர்யா பேட்டி:
இதில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ் ஜே சூர்யா, மீண்டும் இளைய தளபதியை பார்ப்பதில் எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினம் சாருக்கு தான் நன்றி சொல்லணும்.
அவர்தான் என்னை விஜய் சாரிடம் கதை சொல்வதற்கு அழைத்துப் போனார். படத்தின் கதையை நடிகர், உதவி இயக்குனர் தொடங்கி பலரிடம் சொல்லும் போது படத்தின் காட்சிகள் அத்தனையும் என் மனதுக்குள் ஒரு லட்சம் முறை ஓடி இருக்கும். ஆடியன்ஸ் பிரஷ்ஷான மனநிலையில் வரும் போது ஒரு படத்தை பயங்கரமாக என்ஜாய் பண்ணுவார்கள். ஆனால், ஆடியன்ஸுக்கு இருக்கிற சர்ப்ரைஸ் ஒரு இயக்குனருக்கு இருக்காது.
https://www.youtube.com/watch?v=ILCt1JVeNig
விஜய் பற்றி சொன்னது:
இன்று இந்த நிகழ்வில் குஷி படத்தின் பாடல்களை பார்வையாளர்களில் ஒருவனாக கேட்டு நானும் என்ஜாய் பண்ணினேன். இந்த படத்துக்கு அத்தனையும் அமைந்தது. இந்த படத்தின் கதையை விஜய் சார் கேட்டுட்டு பெருசாக ரியாக்ஷன் கொடுக்கவில்லை. நான் கூட அவருக்கு கதை பிடிக்கலை என்று நினைத்து ரத்தினம் சாரை பார்த்தேன். அதற்கு பிறகு பிடிக்கலைன்னா நான் வேறு கதை சொல்கிறேன் என்று கேட்டேன். அதற்கு விஜய் சார், ஏன் இது நல்லா தானே இருக்கு. இதுவே பண்ணுவோம் என்று சொன்னார். அதே அவர் ரொம்ப அமைதியாக தான் சொன்னார் என்று கூறியிருக்கிறார்.