கதையில் நிறைய மாற்றங்கள் சொல்லி வந்த படம் தான் அது - நெகிழ்ச்சியில் எஸ்.ஜே சூர்யா சொன்னது
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் பாடலாசியரும் ஆவார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் lik(லவ் இன்சூரன்ஸ் கம்பெனி).
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி செட்டி, எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். கடந்த வாரம் தான் இந்த படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றிருக்கிறது இதில் பட குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள்.
lik படம்:
அப்பொழுது விழாவில் பேசிய எஸ் ஜே சூர்யா, ஒரு இயக்குனர் என்னிடம் வந்து நான் தான் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று கதை சொன்னார். அந்த கதையில் நான் சில மாற்றங்கள் சொன்னேன். அந்த இயக்குனர் அதை சரி செய்து வந்து மீண்டும் கதையை சொன்னார். நான் மீண்டும் அந்த கதையில் மாற்றம் சொன்னேன்.
எஸ்.ஜே சூர்யா சொன்னது:
அந்த இயக்குனர் மீண்டும் அதையும் சரி செய்தார். பிறகு அவரிடம் நான்,எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். நான்தான் வேண்டும் என்று சொல்லி கதையை மாற்றி உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள் என்று சொன்னேன். அதற்கு பிறகு அந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. நான் அந்த இயக்குனரை அழைத்து பாராட்டினேன். நான் மனதில் பட்டதை சொல்லி அனுப்பிய அந்த படம் தான் லப்பர் பந்து.
https://www.youtube.com/watch?app=desktop&v=H9fJNvXxYro
படம் பற்றி சொன்னது:
மேலும், இந்த படத்தினுடைய நாயகன் பிரதீப் ரங்கநாதன். அவர் ஒருமுறை என்னிடம் நடித்துக் காட்டினார். அதற்கு நான், நீங்கள் நன்றாக நடிக்கிறீர்களே சார். நீங்கள் சூப்பராக வருவீர்கள். நீங்களே நடிக்கலாமே என்று சொன்னேன். நான் சொல்லி ஏழு வருடத்திற்குள் அவர் ஒரு மனிதன் ஜீரோ டூ ஹீரோ ஆகியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.