'என் உழைப்புக்கும், உண்மைக்கும் கிடைத்த பரிசு' - டாக்டர் பட்டம் பெற்ற எஸ். ஜே. சூர்யா நெகிழ்ச்சி

By krithika · 2/12/2024

பிரபல இயக்குனர் மட்டும் நடிகருமான எஸ் ஜே சூர்யா, டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனரும் பணிபுரிந்து இருந்தார். அதற்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் அஜித்தை வைத்து வாலி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

அதற்குப் பிறகு குஷி, நியூ போன்ற பல படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இதற்கு இடையே, இவர் துணை நடிகராகவும் நடித்து வந்தார். மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான 'நியூ' படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல படங்களில் கதாநாயகன், துணை கதாநாயகன் மற்றும் வில்லன் ரோல்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் பிரபலமாக நடித்து வருகிறார்.

பட்டமளிப்பு விழா:

இந்நிலையில், நேற்று டிசம்பர் 1ஆம் தேதி, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் 4463 பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கே கணேஷ் மற்றும் துணைத் தலைவர் பிரீத்தா கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டிருக்கிறார்.

டாக்டர் பட்டம்:

மேலும், இந்த விழாவில் சுமார் 4000 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நாலு பேருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதன்படி கலைப்பிரிவில் நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கு டாக்டர் பட்டமும், விளையாட்டுப் பிரிவில் பேட்மிட்டன் வீரர் புல்லேலா கோபிசாந்த் மற்றும் தொழில்துறையில் சாதனை படைத்த நேச்சுரல் குடும்ப தலைவர் சி கே குமாரவேல் ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பில்லா வழங்கி பாராட்டி உள்ளார்.

எஸ் ஜே சூர்யா பேசியது:

இதனையடுத்து டாக்டர் பட்டம் பெற்ற எஸ் ஜே சூர்யா பேசுகையில், நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா ? என்று கேட்டால் அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், என் உழைப்புக்கு உண்மையாக இருப்பேன். அது என்னிடம் உள்ள ஒரு நல்ல குணம். அதை நான் 100% பெருமிதமாக சொல்லிக் கொள்வேன். இந்தப் பட்டம் என்னுடைய உழைப்புக்கும், உண்மைக்கும் கிடைத்த பரிசு. இதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by VELS University (@vistaspallavaram_official)

எஸ் ஜே சூர்யா படங்கள்:

மேலும், தற்போது பிற மொழி படங்களில் நடித்து வருவதாகவும், விரைவில் கோலிவுட் திரைப்படங்களிலும் தன்னை பார்க்கலாம் எனவும் கூறியிருக்கிறார். அதேபோல் ஜனவரி மாதம் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் எஸ் ஜே சூர்யா அவர்கள் தெரிவித்துள்ளார். கடைசியாக எஸ் ஜே சூர்யா நடித்து வெளியான 'ராயன்' மற்றும் 'சரிபோதா சனிவாரம்' போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கேம் சேஞ்சர்' மற்றும் 'இந்தியன் 3' போன்ற படங்கள் விரைவில் வெளியாகியுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full