எஸ்கே பெயரை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் - எஸ்கே புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை

By subhashini · 2/10/2024

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதற்கு காரணம். மேலும், இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார்.

இவர் எஸ்கே ப்ரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பல படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும், இவருடைய தயாரிப்பில் கனா, வாழ், டாக்டர், டான், கொட்டுக்காளி போன்ற பல படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த படங்களுமே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் எஸ்கே புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் பெயரில் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

எஸ்கே ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம்:

இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து எஸ்கே ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதில், எங்கள் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.

View this post on Instagram

A post shared by Sivakarthikeyan Productions (@skprodoffl)

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:

இதற்கு எதிராக வரும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைத்தள பதிவுகளையுமே யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த அயலான் படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

அமரன் படம்:

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படம் தீபாவளியை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இதை அடுத்து இன்னும் சில படங்களில் சிவா கமிட்டாகி நடித்து வருகிறார்.

behindtalkies AMP · Quick view
View full