சிவகார்த்திகேயனை கட்டுமஸ்தான மிலிட்ரி மேனாக மாற்றியவர். வெளியான புகைப்படங்கள் இதோ.

By Siva · 14/2/2024

சிவகார்த்திகேயனின் SK21 படத்திற்கான Transformationனுக்கு உதவிய உடற் பயிற்சியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

View this post on Instagram

A post shared by Sandeep Raj (@sandeep_deep)

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை அடுத்து இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிரின்ஸ். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.

இதனை அடுத்து கடைசியாக சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான அயலான் படமும் கலையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தொடர்ந்து இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

ராணுவ அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு அவரது பாடி ட்ரான்ஸ்பர்மேஷனுக்கு உறுதுணையாக இருந்தவர், சென்னை அடையாறைச் சேர்ந்த பிட்னெஸ் ட்ரெய்னர் சந்தீப். தமிழ் சினிமாவில் உள்ள சில திரைபிரபலங்கள் பலருக்கு இவர் ட்ரெய்னராக இருந்துள்ளார். முக்கியமாக சிம்புவின் தொப்பையை குறைத்து, அவரை பிட்டாக மாற்றியவர் சந்தீப் தான். அதனை கேள்விப்பட்டு, சிவகார்த்திகேயனுக்கு சந்தீப்பை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பரிந்துரைத்துள்ளார்.

எஸ்.கே. 21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரனாக நடிக்கிறார் என்றும் அது ஒரு ராணுவ வீரனின் கதை என்பதால் அதற்கேற்ப அவருக்கு பிட்னெஸ் ட்ரெய்னிங் அளித்துள்ளாதாக சந்தீப் கூறியுள்ளார். பாடிபில்டர்ஸை போல் இல்லாமல் ராணுவ வீரர்கள் பிட்டாக இருப்பார்கள். பாடிபில்டர்ஸைப் போல அதிகளவு மசில்கள் அவர்களுக்கு இருக்காது. அதற்கேற்ப சந்தீப் சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி அளித்ததாகவும் கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full