இனியா ஷூட்டிங் ஸ்பாட்டில் புகுந்த உண்மையான நல்ல பாம்பு - பதறிய ரிஷி மற்றும் ஆல்யா. இதோ வீடியோ

By Siva · 25/2/2024

ஆல்யா மானசா நடிக்கும் இனியா தொடரின் படப்பிடிப்பு தளத்தில் நடந்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. அதோடு இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா.

மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

சஞ்சீவ் – ஆல்யா நடிக்கும் சீரியல்கள்:

அதற்கு பின் மீண்டும் கர்ப்பமான ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின் மீண்டும் ஆலியா அவர்கள் சன் டிவியில் சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் இனியா தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இனியா சீரியல்:

இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் இந்த சீரியலை வேறொரு இயக்குனர் இயக்கியிருந்தார். தற்போது ஸ்டாலின் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக ரிஷி நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங் டாப்பிலும் இந்த சீரியல் வந்துவிட்டது. தற்போது சீரியலில் விக்ரம் தங்கை காதலித்த நபர் கெட்டவன் என்று தெரிந்தவுடன் ஆலியா அவருடைய நண்பர் சூர்யாவிற்கு அவரை திருமணம் செய்து வைக்கிறார்.

சீரியல் கதை:

ஆனால், அந்த நபர் விக்ரமின் தங்கையை டார்ச்சர் செய்வதால் ஆலியா மானசாவிற்கும் அவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் அவர் இறந்து விடுகிறார். யாருக்கும் தெரியாமல் ஆல்யா அவருடைய உடலை மறைத்து விடுகிறார். இந்த வழக்கு விக்ரம் இடம் விசாரணைக்கு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு பார்ட்டி விழாவில் இனியா- விக்ரம் இருவரும் சேர்ந்து இருக்கிறார்கள். அப்போது மர்ம நபர்கள் இனியாவை கத்தியால் குத்தி விடுகிறார்கள். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இனியா இருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்று பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

View this post on Instagram

A post shared by alya_manasa (@alya_manasa)

ஷூட்டிங்கில் நடந்தது:

இந்த நிலையில் இனியா சீரியல் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இனியா சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு பாம்பு வந்திருக்கிறது. இதை பார்த்து அங்கிருந்த நடிகர்கள் கொஞ்சம் பதட்டம் ஆகி விட்டார்கள். தற்போது அந்த வீடியோவை தான் ஆலியா மானசா, எங்கள் சூட்டிங் ஸ்பாட்டிற்கு புதிதாக வந்த நபர் என்று வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full