சிநேகிதியே படத்தில் நடிகை ஜோதிகாவிற்கு தோழியாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஜோதிகா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

பின் இடையில் இவர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் மீண்டும் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஜோதிகா என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் கதாநாயகி முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Advertisement

சமீப காலமாக ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும் ஜோதிகா நடித்த படங்களில் ஒன்று தான் சிநேகிதியே. இந்த படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷர்பானி முகர்ஜி. இவர் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகை ஆவார். இவர் 1977 ஆம் ஆண்டு ஹைவான் என்ற இந்தி படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். பின் தமிழில் இவர் 2000 ஆண்டு வெளிவந்த சிநேகிதியே என்ற படத்தில் தான் ஜோதிகாவிற்கு தோழியாக நடித்திருந்தார். அதன் பின் இவர் தமிழில் நடிக்கவில்லை. மேலும், இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும், ஹிந்தி, மலையாளம், போஜ்பூரி போன்ற பிற மொழி படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பாலிவுட் நடிகை கஜோலின் உறவினரும் ஆவார்.

Advertisement

இந்த நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவருக்கு தற்போது 54 வயதாகிறது. லேட்டஸ்டாக கஜோலுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து தமிழ் ரசிகர்கள் பலரும், ஜோதிகா தோழியாக நடித்த நடிகையா இவர்! என்று அதிர்ச்சியில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement
Advertisement