எவ்ளோ காஸ்டலியா இருந்தாலும் ஒரு தடவ போட்ட ட்ரெஸ்ஸ இன்னொரு தடவ போட மாட்டேன் - சினேகா சொன்ன விஷயம். பின்னால் இப்படி ஒரு காரணமா?
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா. இவர் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், பிரசாந்த், தனுஷ் என பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் கவர.
அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும். இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்து பின் வாய்ப்புகள் குறைந்தவுடன் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். அதே போல தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா.
சினேகா-பிரசன்னா குறித்த தகவல்:
பின்னர் தமிழில் மிரட்டலான வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்து இருக்கிறார். இதனிடையே சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் இணைந்தார். இந்த படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின் 2011ம் ஆண்டு தான் பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி இருந்தார்.
https://twitter.com/chettyrajubhai/status/1789291478482849796
சினேகா-பிரசன்னா திருமணம்:
அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விகான் என்ற அழகான மகன் மற்றும் ஆத்யந்தா என்ற ஒரு அழகான மகளும் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக சினேகா- பிரசன்னா ஜோடி திகழ்ந்து வருகிறார்கள். அதோடு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சினேகாவின் பேட்டி வீடியோ:
இந்நிலையில் சினேகாவின் பழைய பேட்டி வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சினேகா, ஒருமுறை பிரபல பத்திரிக்கையில் சினேகா அடிக்கடி ஒரே உடையை அணிந்து கொண்டு வருகிறார். அவருக்கு அணிய வேறு உடைகள் இல்லை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். இதற்கு மோசமான விமர்சனங்களும் வந்தது. இதனாலயே நான் போட்ட டிரஸ் ரிப்பீட் பண்ணவே மாட்டேன்.
ஆடை குறித்து சினேகா சொன்னது :
என்னுடைய கபோர்ட்டில் துணிகளின் எண்ணிக்கை அதிகமாக தான் சென்று கொண்டிருக்கின்றது. சமீப காலமாக நான் சல்வார், சாரி தான் அதிகமாக விரும்புகிறேன். அதனால் அது தொடர்பான நிறைய கலெக்ஷன் வைத்திருக்கிறேன். ஒரு டிரஸ்சை போட்டுவிட்டு அதை தெரிந்தவர்களுக்கோ, என்னுடைய நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன். போட்ட டிரஸ்சை போடுவதில்லை என்று பேசி இருக்கிறார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு கொடுத்தாலும் சிலர், திமிரு என்றெல்லாம் விமர்சித்தும் வருகிறார்கள்.