திரைத்துறையில் நடக்கும் DIVORCE-ஐ தவிர்க்க என்ன அட்வைஸ் சொல்லுவீங்க? - பிரசன்னா சினேகாவின் பதில்

By subhashini · 3/12/2024

பிரபலங்களின் விவகாரத்து குறித்து சினேகா-பிரசன்னா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பாக்யராஜ்-பூர்ணிமா, ரஜினி – லதா, அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா- பிரசன்னா ஜோடி.

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சினேகா. இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள்.

சினேகா – பிரசன்னா ஜோடி :

அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும். தற்போது இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியில் நடுவராகவும் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கடைசியாக நடிகை சினேகா அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.

காதல் To கல்யாணம் :

அதே போல தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. பின்னர் தமிழில் மிரட்டலான வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்து இருக்கிறார். சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் இணைந்தார். இந்த படத்தின் போது தான் இவர்கள் இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விகான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கிறார்கள்.

சினேகா கடை விளம்பரம்:

மேலும், நடிகை சினேகா அவர்கள் நடிப்பில் மட்டும் இல்லாமல் சினேகாலயா என்ற புடவை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடை மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சினேகா மற்றும் பிரசன்னா இருவருமே தங்களுடைய சினேகாலயா கடையினுடைய துணிகளை கர்நாடக இசை கலைஞர்களுக்கு கொடுத்து ராம் வாக் விழா ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியும் சிறப்பாக முடிந்திருக்கிறது. இருவருமே ராஜா- ராணி போல கெட்டபில் மாசாக என்ட்ரி கொடுத்திருந்தார்கள்.

https://www.youtube.com/shorts/M1Im-SESGp0

சினேகா- பிரசன்னா பேட்டி:

இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சினேகா- பிரசன்னாவிடம் நிறைய கேள்வி கேட்டிருந்தார்கள். அப்போது சமீப காலமாக பிரபலங்கள் இடையே விவாகரத்து நடக்கிறது. அதற்கு உங்கள் அறிவுரை என்று கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு சினேகா- பிரசன்னா, திரை துறையில் விவாகரத்து நடப்பதை தடுக்க அறிவுரை எல்லாம் சொல்ல முடியாது. எல்லோருக்கும் அவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதை நாம் மதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full