மகனின் பிறந்தநாளுக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து - பரிமாறிய மகன், குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிட்ட மகள்
பிரபல நடிகை சினேகா தனது மகனின் பிறந்த நாளை ஆதரவற்ற குழந்தைகள் உடன் கொண்டாடி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா. இவர் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், பிரசாந்த், தனுஷ் என்ன பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்களை கவர. அதனாலேயே அவரை 'புன்னகை அரசி' என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முக பாவமும் இருக்கும். இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த பின் வாய்ப்புகள் குறைந்த உடன் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். அதேபோல், தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா.
சினேகா - பிரசன்னா குறித்த தகவல்:
பின்னர் தமிழில் மிரட்டலான வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்திருக்கிறார். இதனிடைய சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின் 2011 ஆம் ஆண்டு, நடிகர் பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி இருந்தார்.
சினேகா- பிரசன்னா திருமணம்:
அதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு சினேகா- பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விஹான் என்ற அழகான மகன் மற்றும் ஆதியந்தா என்ற ஒரு அழகான மகளும் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் க்யூட் தம்பதிகளாக சினேகா- பிரசன்னா ஜோடி திகழ்ந்து வருகிறார்கள். அதோட இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சினேகா- பிரசன்னா மகன்:
இந்நிலையில் சமீபத்தில், நடிகை சினேகா- பிரசன்னா தம்பதியர், தனது மகனின் 9 ஆவது பிறந்த நாளை கிராண்டாக கொண்டாடி இருக்கிறார்கள். அதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மகன் விஹான் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் என்பதால் அந்த தீமில் கேக் முதல் டிரஸ் வரை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தனது மகனின் பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார்கள். நடிகை சினேகா இது போல் ஏற்கனவே ஒருமுறை தனது மகளுடன் ஆதரவற்ற குழந்தைகளோடு கொண்டாடிய புகைப்படம் வெளியாகியிருந்தது நாம் அறிந்ததே.
https://www.youtube.com/shorts/nhvqRLe973s
ஆதரவற்ற குழந்தைகளோடு பிறந்தநாள்:
அதாவது, தனது மகனின் ஒன்பதாவது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், அந்த குழந்தைகளுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டது. அப்போது அந்த குழந்தைகளோடு ஒன்றாக சேர்ந்து சினேகாவின் மகளும் உட்கார்ந்து சாப்பிட, சினேகாவின் மகன் பரிமாறி இருக்கிறார். அதற்குப் பிறகு அந்த குழந்தைகளுக்கு நிறைய பரிசுகளும் கொடுத்திருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.