ஜனா பட ஷூட்டிங்கில் சந்தித்து, பொது இடத்தில் அஜித்தை கண்டுகொள்ளாமல் சென்றுள்ள சினேகாவின் அக்கா - அவரே சொன்ன காரணம்.

By subhashini · 26/12/2023

அஜித் குறித்து நடிகை சினேகாவின் அக்கா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டம் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, அஜித் பற்றி பெரிதாக எந்த தகவலுமே இணையத்தில் வருவதில்லை. ஆனால், சமீப காலமாக அஜித் குறித்து ஏதாவது ஒரு செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் அஜித் குறித்து பிரபல நடிகை சினேகாவின் அக்கா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. அந்த பேட்டியில் சினேகாவின் அக்கா கூறியது, அஜித்தை ஜனா படத்தில் நடிக்கும் போது சந்தித்தேன்.

சினேகாவின் அக்கா பேட்டி:

அப்போது என்னுடைய மகன் சின்ன குழந்தை. அவனை அவர் நன்றாக பார்த்துக் கொண்டார். அதற்குப் பிறகு நான் ஒரு பத்து வருடம் கழித்து ஒரு மால் ஒன்றில் அவரைப் பார்த்தேன். பார்த்தேன் பெரிய நடிகர் என்பதால் எந்தவித தொந்தரவையும் செய்ய கூடாது என்று நினைத்து நான் பேசாமல் ஒதுங்குகின்றேன். ஆனால், என்னை பார்த்த உடனே அஜித் எந்தவித தலைகணம் இல்லாமல் எதார்த்தமாக என்னிடம் வந்து என்னுடைய குடும்பத்தை விசாரித்தார். எனக்கு ரொம்ப சங்கடமாக இருந்தது.

அஜித் குறித்து சொன்னது:

எவ்வளவு தான் புகழின் உச்சத்தில் இருந்தாலும் அஜித் எதையுமே மறக்கவில்லை. நான் அஜித்தை பார்த்தும் பார்க்காதது போல் இருந்தேன். ஆனால், அவர் எதார்த்தமாக என்னிடம் வந்து பேசியதை இன்று வரை என்னால் மறக்க முடியாது. என்னை பொறுத்தவரை அஜித் என்றுமே ஒரு ஜென்டில்மேன் தான். அவருடைய விடாமுயற்சி படமும் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து அஜித்தின் ரசிகர்கள் பலருமே தல என்றால் சும்மாவா? என்றெல்லாம் ஹாஸ்டாக்குகளை உருவாக்கி தெறிக்க விட்டு வருகிறார்கள்.

துணிவு படம்:

கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். அதன் பின் அஜித்தின் விடா முயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார்.

விடாமுயற்சி படம்:

இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க அஜர்பைஜான் மட்டும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full