சினேகன் - கன்னிகா ஜோடிக்கு பிறந்த இரட்டை குழந்தை- சந்தோஷத்தில் ஜோடியாக வெளியிட்ட புகைப்படம்

By subhashini · 31/1/2025

சினேகன்-கன்னிகாவுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இவர் 2500க்கும் அதிகமான பாடல்கள் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான்.

இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் என்று சொல்லலாம். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். இதனிடையே சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

சினேகன் – கன்னிகா திருமணம்:

அதோடு சுமார் 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சயாக திருமணம் நடந்தது. கன்னிகாவும் ஒரு நடிகை தான். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். பின் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகன் – கன்னிகா குறித்த தகவல்:

மேலும், இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆழமாகக் காதலித்து தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர். அதோடு இவர்களுக்கு திருமணமாகி வருடங்கள் சில கடந்தாலும், இருவருமே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இது குறித்த பலருமே ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இருந்தாலுமே, இருவரும் மௌனம் காத்து வந்தார்கள்.

கன்னிகா கர்ப்பம்:

மேலும், சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் பிசியாக இருக்கிறார். கன்னிகா யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு கூட இவர் புதிய தொழிலை ஆரம்பித்திருப்பதாக அறிவித்து இருந்தார். இவர்கள் ‘சினேகன் ஹெர்ப்ஸ்’ என்ற பெயரில் ஹெர்ப்ல் ஹேர் ஆயில் தயாரிக்கும் தொழிலை தொடங்கி இருக்கிறார்கள். இதை அடுத்து கடந்த ஆண்டு கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். அதன் பின் கன்னிகா வளைகாப்பு புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினேகன்-கன்னிகா குழந்தை:

இப்படி இருக்கும் நிலையில் சினேகன்-கன்னிகாவுக்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருக்கிறது. இதை அடுத்து பலருமே கன்னிகா- சினேகன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள். மேலும், இது குறித்து சினேகன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர்,

"இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன்
மகளாய் மாற " என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது

தாயே எந்தன் மகளாகவும்
மகளே எந்தன் தாயாகவும்
இரு தேவதைகள் பிறந்திருக்கிறார்கள்

இதயமும்,மனமும்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
நிரம்பி வழிகிறது

உங்களின் தூய அன்பினால்
எங்கள் வாரிசுகளை
வாழ்த்துங்கள்.

என்றும் அன்புடன்
சினேகன்
கன்னிகா சினேகன் .

behindtalkies AMP · Quick view
View full