சின்னத்திரையில் ஹீரோவாக களமிறங்கும் பிக் பாஸ் சினேகன்- எந்த சேனல்? இவங்க தான் அவருக்கு ஜோடியா
பிக் பாஸ் சினேகன் சின்னத்திரையில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இவர் 2500க்கும் அதிமான பாடல்கள் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான்.
இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் என்று சொல்லலாம். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சினேகன் நடிக்கும் சீரியல்:
இந்த நிலையில் நடிகர் சினேகன் சின்னத்திரையில் களமிறங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பவித்ரா என்ற சீரியலில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த சீரியலில் சினேகனுக்கு ஜோடியாக செய்தி வாசிப்பாளரும், நடிகையாகவும் இருக்கும் அனிதா சம்பத் நடிக்க இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=Yshjci880qs
சீரியல் குறித்த தகவல்:
இந்த சீரியலில் அனிதா பணக்கார வீட்டுப் பெண். இவர் வீட்டில் தான் சினேகன் வேலை செய்து கொண்டிருக்கிறார். பவித்ராவிற்கு சினேகன் மீது காதல் வருகிறது. ஆனால், சினேகன் அந்த காதலை ஏற்றுக் கொள்வாரா? இல்லையா? என்பது தான் கதையாக இருக்கிறது. தற்போது இந்த சீரியல் ப்ரோமோ தான் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
சினேகன் – கன்னிகா திருமணம்:
சுமார் 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சயாக நடந்து இருந்தது. கன்னிகாவும் ஒரு நடிகை தான். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். பின் இவர் சில படங்களிலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆழமாகக் காதலித்து தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர்.
சினேகன் – கன்னிகா சொன்ன குட் நியூஸ்:
அதோடு இவர்களுக்கு திருமணமாகி வருடங்கள் சில கடந்தாலும் இருவருமே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இது குறித்த பலருமே கேள்வி எழுப்பி இருந்தார்கள். இருந்தாலுமே, இருவரும் மௌனம் காத்து வந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கன்னிகா, தன் பல நாள் கனவு நினைவான சந்தோஷத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லி இருந்தார். பின் இது தொடர்பான வீடியோவை இணையத்தில் பதிவிட்டு, நாங்கள் அம்மா அப்பாவாக போறோம் என்று கூறியிருந்தார். பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்கள்.