'என்ன சொல்றா உங்க பேத்தி' 100 வயதை கடந்த தனது தந்தையின் வீடியோவை வெளியிட்ட சினேகன்

By subhashini · 6/9/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இவர் 25000க்கும் அதிகமான பாடல்கள் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று சொல்லலாம். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். இதனிடையே சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். அதோடு சுமார் 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.

சினேகன் – கன்னிகா திருமணம்:

இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு கமல் தலைமையில் படு விமர்சயாக நடந்தது. கன்னிகாவும் ஒரு நடிகை தான். இவர் சன் தொலைக்காட்சியில் நடிகை இருந்த ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். பின் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆழமாகக் காதலித்து தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர்.

கன்னிகா-சினேகன் குழந்தை:

மேலும், கடந்த ஆண்டு கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். அதன் பின் கன்னிகா வளைகாப்பு புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. பின் சில மாதங்களுக்கு முன் தான் இவர்களுக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதற்கு பலருமே கன்னிகா- சினேகன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து கன்னிகா- சினேகா இருவருமே தங்கள் மகள்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள், புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்கள்.

https://youtube.com/shorts/uDA4ViZ6r54?si=VL-yzyRFPG3y4NU2

சினேகன் வீடியோ:

இப்படி இருக்கும் நிலையில் சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, 100 வயதை கடந்த தன்னுடைய தந்தை சிவசங்குடன் தன்னுடைய மகள்கள் இருக்கும் வீடியோவை தான் பகிர்ந்து இருக்கிறார். அதில் சினேகன், தன்னுடைய தந்தையிடம் என்ன சொல்கிறார் பேத்தி என்று கேட்கிறார். இதை பார்த்த பலரும் சினேகன் அப்பாவிற்கு நூறு வயதுக்கு மேல் ஆகிவிட்டதா? என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full