சமந்தா குறித்து நாக சைதன்யாவின் வருங்கால மனைவி அன்று சொன்ன விஷயம் இன்று வைரல்

By subhashini · 9/8/2024

நடிகை சமந்தா குறித்து நாக சைதன்யாவின் வருங்கால மனைவி கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜோஸ்' என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகம் ஆனார். பின் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.

இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது.
அதன் பின், இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சந்தோஷமாக தனது குடும்ப வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்கள். அதோடு இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

சமந்தா- நாக சைதன்யா பிரிவு:

மேலும், இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பின், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. அதோடு இவர்களுடைய பிரிவுக்கு காரணம், 'ஊ சொல்றியா' என்ற பாடல் என்றும் பலருமே கூறியிருந்தார்கள். அந்தப் பாடலில் நடிகை சமந்தா பயங்கர கிளாமராக நடனமாடியிருந்தார். ஆனால், இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரம் தெரியவில்லை.

நாக சைதன்யா- சோபிதா துளிப்பாளா காதல்:

இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. ஆனால், இது குறித்து இவர்கள் இருவரும் எந்த ஒரு விளக்கமோ கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இன்று, நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் நடந்தது.

நாக சைதன்யா- சோபிதா துளிப்பாளா நிச்சயதார்த்தம்:

மேலும், இவர்களின் நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதோடு இந்த நாள் தான் நாகச் சைதன்யா மற்றும் சமந்தா தங்களது காதலை தெரிவித்துக் கொண்ட நாளாம். அதற்காக, இதே நாளில் சோபித்தாவுடன நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று நாக சைதன்யா விரும்பி இருந்தாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.

நடிகை சோபிதா பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் நடிகை சோபிதா, சமந்தா குறித்து பேசியிருக்கும் பழைய வீடியோவில், சமந்தா உடைய சினிமா பயணம் சூப்பர் கூலாக இருக்கிறது. அவருடைய திரைப்படங்களை எடுத்து பார்த்தால் அதை அவர் கையாண்ட விதம் உண்மையாகவே கூல். நாக சைதன்யா ரொம்ப கண்ணியமானவர் என்று பேசி இருக்கிறார். பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சோபிதா. இவர் ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் போன்ற படங்களில் நடிக்கிறார். தற்போது இவர் படங்கள், வெப் சீரிஸ்கள் என பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full