அடுத்த விவாகரத்து? கணவரை பிரிந்து வாழும் ஹன்சிகா, உண்மையை போட்டுடைத்த சோஹைல்

By subhashini · 21/7/2025

தன்னுடைய கணவரை விட்டு நடிகை ஹன்சிகா பிரிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. “ஷக்கலக்கா பூம் பூம்” என்ற சீரியலின் மூலம் தான் ஹன்சிகா தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் ஹிந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ போன்ற பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த “தேசமுதுரு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார். அதன் பின்னர் இவர் முதன் முதலில் தனுஷ் நடித்திருந்த “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், பிரியாணி, ஆம்பள, புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, ரோமியோ ஜூலியட், போகன், குலேபகாபலி, மான் கராத்தே, அரண்மனை 1 மற்றும் 2 என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

ஹன்சிகா திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இடையில் இவர் எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்தார். அதன் பின் இவர் நடித்த “மஹா” படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் சிம்புவும் நடித்திருந்தார். இந்த படமானது ஹன்சிகாவின் 50வது படமாகும். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படமானது அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்க வில்லை. பின் இவர் எந்த படத்திலும் வில்லை.

ஹன்சிகா திருமணம்:

இதற்கிடையில் ஹன்சிகா அவர்கள் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டிலிருந்தே தொழில் கூட்டாளியாக பயணித்து வருகிறார்கள். அனைவரும் எதிர்பார்த்த இவர்களது திருமணமானது 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் நடந்தது. இவர்களது திருமண கொண்டாட்டம் 3 நாட்களுக்கு முன்னராகவே தொடங்கிவிட்டது. இதில் மெஹந்தி, இசை நிகழ்ச்சிகள் என பல கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தது.

ஹன்சிகா விவாகரத்து சர்ச்சை:

மேலும், சோஹைல் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். ஹன்சிகாவின் தோழியை தான் சோஹைல் முதல் திருமணம் செய்திருந்தார். இருந்தாலுமே ஹன்சிகாவுடன் காதல் ஏற்பட்டதால் முதல் மனைவியை சோஹைல் விவாகரத்து செய்தார். அதற்குப்பின் சோஹைல், ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஹன்ஷிகா தன் கணவரை விட்டு பிரிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஹன்சிகாவிற்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கிறது.

ஹன்சிகா கணவர் விளக்கம்:

தங்களுடைய முதல் திருமண நாளுக்கு தான் ஹன்சிகா தன்னுடைய கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அதற்குப்பின் ஓராண்டுக்கு மேலாக தன்னுடைய கணவனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எதையுமே பதிவிடாமல் இருந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், சோஹைல் குடும்பத்துடன் ஹன்சிகாவிற்கு ஒத்துப்போகாததால் பிரிந்து தற்போது தன்னுடைய தாய் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக ஹன்சிகா எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சோஹைல் இது தொடர்பாக அளித்த பேட்டியில், எங்களை பற்றி வரும் தகவல் எதுவும் உண்மை கிடையாது. பிரிந்து வாழ்வது உண்மையா? விவாகரத்து செய்து உண்மையா? என்ற கேள்விக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full