ராஜா அப்படிப்பட்டவர் தான் என்பதை சத்தியம் செய்து சொல்வேன் - சாலமன் பாப்பையா விளக்க வீடியோ
பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் கடந்த 3ஆம் தேதி அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பில் அட்லாண்டா சென்றிருந்தார். அங்கு ராஜாவுக்கு தமிழ் உணவு தயாரித்து கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு நடந்த கலந்துரையாடலில் பேச்சாளர் ராஜா, ஜாதி குறித்து கேட்டதாகவும், அந்தப் பெண் ரொம்பவே வருத்தத்தில் இருந்ததாகவும் அவருடைய சகோதரர் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் ராஜா மீது பல கண்டனங்கள் எழுந்திருக்கிறது.
மேலும், இது குறித்து விளக்கம் அளித்து பேசிய பட்டிமன்றம் ராஜா, நான் ஜாதி குறித்து எதுவுமே கேட்கவில்லை. அமெரிக்காவில் அட்லாண்டா பகுதியில் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு சென்றபோது பல தமிழ் சொந்தங்கள் அவர்களுடைய வீடுகளில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள். சில நேரங்களில் அந்த சாப்பாடு நம்ம ஊரின் உணவை விட ரொம்ப சுவையாக இருக்கும். நான் அங்கு இருப்பவர்கள் எல்லாம் விசாரித்து வந்தேன். அப்போது அங்கு ஒருவரை பார்த்து, இது செட்டிநாடு உணவா? என்று கேட்டேன். ஆனால், நான் அவருடைய ஜாதி குறித்து கேட்டதாக சொல்லப்படுகிறது. நான் ஜாதி சமூகம் குறித்து யோசிக்கும் அளவுக்கு சின்ன புத்தி கொண்டவன் கிடையாது.
ராஜா சாதி சர்ச்சை:
தமிழ் ஜாதி என்ற ஒன்றைத்தான் நான் பெருமையாக நினைக்கிறேன். வேறு ஜாதி எதுவும் இல்லை. அந்த நிகழ்ச்சி பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது சோஷியல் மீடியாவில் பரப்புகிறார்கள். அப்படி நடந்திருந்தால் அப்போதே அந்த பெண் என்னிடம் கேட்டிருக்கலாம். அந்த இடத்தில் எங்களை தேடி சாப்பாடு கொடுப்பவர்களை நான் ஏன் அப்படி கேட்க போகிறேன். நான் மன வேதனையுடன் தான் இதை பேசுகிறேன். எந்த காலத்திலும் நான் அப்படி இருந்தது கிடையாது என்று கூறி இருந்தார். இதை அடுத்து பலரும் ராஜாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வெளியிட்ட வீடியோவில், தம்பி ராஜாவை பற்றி ஒரு தவறான செய்தி சோசியல் மீடியாவில் சென்று கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.
ராஜா விளக்கம்:
யாரோ ஒரு தாய் அறிந்தோ, அறியாமலையோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பில் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறார். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ராஜா என்னுடைய பண்ணையிலேயே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவர் என்னுடைய பிள்ளை. அவர் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் சொல்லை அவருடைய சிந்தையில் ஏற்றுக் கொண்டவர். அவருக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் கொஞ்சமும் இருக்காது என்பதை நான் சத்தியம் செய்து சொல்வேன். ஆனால், அப்படிப்பட்ட மனிதரை ஏதோ ஒரு தவறான கணிப்பினால் இப்படி சொல்லி இருப்பது எனக்கு தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=ikfkuDXU23k
சாலமன் வீடியோ:
நான் அங்கில்லாத போது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால், அவருடைய மனதுக்குள்ளே ஜாதி உணர்வு பற்றிய சிந்தனை எதுவும் கிடையாது என்பதை நான் ஆயிரம் முறை சத்தியம் செய்து சொல்வேன். அவரைப் பற்றி இப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. எங்களுடைய பண்ணையில் யாரும் அப்படி கிடையாது. தமிழர்களுக்கு இது நல்லது கிடையாது. தமிழ் வளர்ச்சிக்கு இது நல்லதுமில்லை. அதனால் மிகப் பணிவாக உங்களிடம் கேட்கிறேன். எதுவாக இருந்தாலும் அவரிடம் நேரே கேட்டிருக்கலாம். அந்த தாய் இந்த பதிவை போட்டு பகமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர்களிடத்தில் என்னுடைய வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜா அப்படிப்பட்டவர் இல்லை என்பதை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.