'பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர வடிவேலு கூட' - நடிகை சோனா பேட்டியில் பகிர்ந்தது
வடிவேலு குறித்து நடிகை சோனா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து இருந்தவர் சோனா. இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பின் இவர் சில காலம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் வடிவேலு, விவேக் போன்ற பல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நடிகை சோனா அவர்கள் வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய கனிமொழி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அந்த படம் எதிர்பார்த்தளவிற்கு வெற்றி பெறவில்லை.
சோனா திரைப் பயணம் :
இதனால் சோனாவிற்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் தான் ஏற்பட்டது. அதற்குப் பிறகு சோனா படங்களை தயாரிக்காமல் நடித்து மட்டும் வந்தார். மேலும், இடையில் சில ஆண்டுகள் இவர் டங்களிலிருந்தும் விலகி இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த அபி டெய்லர் என்ற சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அதனை அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி என்ற சீரியலும் சோனா வில்லியாக நடித்திருந்தார்.
சோனா குறித்த தகவல்:
பின் திடீரென்று அந்த சீரியலில் இருந்து பிரச்சனையின் காரணமாக சோனா விலகிவிட்டார். தற்போது சோனா ஸ்மோக் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரை சோனாவே எழுதி இயக்கி இருக்கிறார். சொல்லப்போனால், இந்த தொடரின் மூலம் இவர் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார். இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்களை கதையாக எழுதி இந்த வெப் தொடரை இயக்கி வருகிறார். இந்த வெப் சீரிஸ் எட்டு எபிசோடுகளாக உருவாகி இருக்கிறது.
சோனா பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சோனா, வடிவேலு சார் பத்தி பேசுற அளவுக்கு அவர் Worth கிடையாது. நான் அவர் கூட எந்த படத்திலும் இனிமேல் நடிக்க விரும்பவில்லை. வடிவேல் சார் பத்தி வேற யார்கிட்டயாவது என்ன நினைக்கிறீங்க என்று இண்டர்வியூல கேட்டு பாருங்க. நிறைய பேரு கழுவி ஊத்துவாங்க. அதையே நானும் பண்ண வேணாம்னு நினைக்கிறேன். 'குசேலன்' படத்திற்குப் பிறகு வடிவேல் சார் கூட எனக்கு 16 படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தது. கோடி ரூபாய் கொடுத்தா கூட வேண்டாம் என்று சொல்லிட்டேன்.
https://www.youtube.com/watch?v=hA7zFWPOykk&t=1035s
குசேலன் படம்:
பிச்சை எடுத்து கூட சாப்பிடுவேனே தவிர அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன் என்று கூறி இருக்கிறார்.கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெறும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த படம் குசேலன். இந்த படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கி இருந்தார். இந்த படத்தில் கே.பாலச்சந்தர் என்பவர் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ரஜினி, மீனா, பசுபதி, சந்தானம், நயன்தாரா, லிவிங்ஸ்டன், பிரபு, எம் எஸ் பாஸ்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகி ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.