வைரலான சல்மான் கான் - சோனாக்ஷி திருமண புகைப்படம் - சோனாக்ஷி சின்ஹா கொடுத்த விளக்கம்.

By Ajju · 6/3/2022

சல்மான் கானுடன் திருமணம் நடைபெற்றதாக எழுந்த சர்ச்சைக்கு சோனாக்ஷி சின்கா பதில் அளித்துள்ளார். பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக களமிறங்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள்.

இருந்தாலும் 2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான்கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. அதிலிருந்து மீண்டு இவர் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பல ஆண்டு காலமாக சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி இவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்தார் என்று சொல்லலாம்.

சல்மானும் காதல் சர்ச்சைகளும் :

பாலிவுட்டில் திருமணம் செய்யாமல் இருக்கும் ஹீரோ என்று கேட்டால் அனைவரும் சல்மான்கான் உடைய பெயரை தான் சொல்வார்கள். சல்மான்கான் அவர்கள் ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து வந்தார். ஆனால், அந்த காதல் சேரவில்லை என்று தான் சொல்லணும். பிறகு ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். ஆனால், சல்மான்கான் மட்டும் திருமணம் செய்து கொள்ள வில்லை.

இந்த நிலையில் தற்போது சல்மான்கான் திடீரென நடிகை சோனாக்ஷி சின்ஹாவை திருமணம் செய்து கொண்டிருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி வருகிறது. நடிகர் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியானது. இது பாலிவுட்டில் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சல்மான்கான் - சோனாக்ஷி சின்கா திருமணம்:

சோனாக்ஷி சின்ஹா விளக்கம் :

இப்படி சமூக வலைத்தளங்களில் வெளியான இவர்களுடைய திருமண புகைப்படம் உண்மையா? என்று ஆராய்ந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த புகைப்படங்கள் எல்லாம் போலியானது என்பது தெரியவந்தது. அது உண்மையில் ஆர்யா - சயீஷா திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள சோனாக்ஷி சின்ஹா, உண்மையான படத்திற்கும், மார்பிங் செய்யப்பட்ட படத்திற்கும் வித்தியாசம் சொல்ல முடியாத ஊமையா நீங்கள்?" என்று பதில் அளித்துள்ளார்.

திருமணம் பற்றி சோனக்ஷி சின்ஹா :

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் சோனாக்ஷி.அப்போது ரசிகர் ஒருவர் "அனைவரும் திருமணம் செய்கின்றனர். நீங்கள் எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த சோனாக்ஷி, "அனைவருக்கும் கொரோனா வருகிறது. எனக்கும் கொரோனா வரவேண்டுமா என்ன? " என்று மிகவும் கேலியாக பதில் அளித்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full