கேன்சரில் இருந்து மீண்டு வந்த நடிகை.! இன்ஸ்டாகிராமில் கொடுத்த மோசமான போஸ்.!

By Rajkumar · 8/3/2019

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான நடிகை சோனாலி பிந்த்ரே. சமீபத்தில் இவர் புற்று நோயால் பாதிக்கப்ட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

https://www.instagram.com/p/BuqTpLhBBll/

இந்தி நடிகையான இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் குணால் நடித்த ‘காதலர் தினம்’ நடிகர் அர்ஜுன் நடித்த ‘கண்ணோடு காண்பதெல்லாம் ‘ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாலி தெரிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

தற்போது நியூயார்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாளி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறார் என்று கூறப்பட்டது. சமீபத்தில் புற்று நோய் குணமடைந்து இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

அதே போல முன்பை போல மீண்டும் சினிமாவிலும் நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full