முற்றிவரும் புற்று நோய்..!கண்களை இழக்க நேரிடும் சோனாலி பிந்த்ரே..!

By Rajkumar · 3/11/2018
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான நடிகை சோனாலி பிந்த்ரே. சமீபத்தில் இவர் புற்று நோயால் பாதிக்கப்ட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தி நடிகையான இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் குணால் நடித்த ‘காதலர் தினம்’ நடிகர் அர்ஜுன் நடித்த ‘கண்ணோடு காண்பதெல்லாம் ‘ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாலி தெரிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது நியூயார்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாளி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறார் என்று கூறப்பட்டது. தனக்கு புற்று நோய் இருப்பதை அறிந்த நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி தமக்கு போன் செய்து நலம் விசாரித்து தனக்கு ஆறுதலாக இருந்து வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கீமோ சிகிச்சைக்காக மொட்டை அடித்தார். அப்போது அவர் கண்ணீர்விட்டபடி உருக்கமாக பேசியிருந்தார். பிறகு சிகிச்சைக்குப் பின் விக் வைத்துக்கொண்டு, புதிய தோற்றத்தில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். [embed]https://www.instagram.com/p/BprW3dfHPdr/[/embed] இப்போது கீமோதெரபி சிகிச்சை காரணமாக கண்கள் பாதிக்கப்பட்டது என்று அவர் திடுக்கிடும் தகவலைதெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் கீமோதெரபி சிகிச்சை காரணமாக எனது கண்கள் வினோதமான செயல்களை செய்தன. என்னால் சில நேரம் படிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் பீதி அடைந்தேன். இப்போது சரியாகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full