'Cancer' நோயால் அவதிப்படும் பிரபல நடிகை..! முற்றிவிட்டது Cancer.!

By Ajju · 4/7/2018
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான 'பம்பாய்' படத்தில் ஹம்ம ஹம்மா என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்ட்டுள்ளார்.தற்போது இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி நடிகையான இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் குணால் நடித்த 'காதலர் தினம்' நடிகர் அர்ஜுன் நடித்த 'கண்ணோடு காண்பதெல்லாம் ' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.தற்போது 43 வயதாகும் இவர் சமீபத்தில் தனது உடலில் வலி ஏற்பட்டுள்ளது என்று மருத்துவரிடம் சென்றுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு புற்று நோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போது நியூயார்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாளி தனது ட்விட்டர் பக்கத்தில்   ''நாம் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கை நம்மை பந்தாடிவிடுகிறது. இதோ எனக்கு கேன்சர் வந்திருக்கிறது என்று உறுதியாகிவிட்டது. அதிலும், கேன்சர் அதன் உச்சகட்டத்தில் இருக்கிறதாம். எதிர்பாராத பரிசோதனைகள்... அவை தருகிற வலிகள்... என்னைச் சுற்றிலும் எனக்கு உதவி செய்வதற்காக, என் குடும்பமும் நண்பர்களும் சூழ்ந்து நின்றுகொண்டிருக்கிறார்கள். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்." என்று தெரிவித்துள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full