சோனு சூட் கடவுள் போன்றவர்- டிராக்டரை பெற்ற ஏழை விவசாயி நெகிழ்ச்சி.

By Rajkumar · 27/7/2020

நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் பல்வேறு நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள். அதிலும் நடிகர் சோனு சோத் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.

https://twitter.com/PhanindraP_TNIE/status/1287400650351861760

சமீபத்தில் மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, 'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். சமீபத்தில் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவ். தனக்கு சொந்தமான நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்தார்.

ஆனால், கையில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் நிலத்தை உழுவதற்கு மாடு, கலப்பை ஆகியவற்றுடன் கூடியவரை வரவழைத்தால் கொடுக்க அவரிடம் பணம் இல்லை.வேறு வழி இல்லாத நிலையில் தன்னுடைய இரண்டு மகள்களையும் மாடுகள் போல் பயன்படுத்தி நிலத்தை சீர் செய்தார் அந்த விவசாயி. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, இதனை பார்த்த பாலிவுட் நடிகர் சோனு சூட் நாளைக்குள் அந்த விவசாயிக்கு மாடுகளுக்கு பதிலாக ட்ராக்டர் நாளைமாலை சென்றடையும்’என்று பதிவிட்டிருந்தார்.

சோனு சூத் சொன்னதை பொலவே நாகேஸ்வரராவ்விற்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்த ட்ராக்டரை பெற்றுக்கொண்ட நாகேஸ்வரராவ் பேசுகையில், படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோதான். புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப அவர் உதவி செய்ததை அறிந்த நாள்முதல் நாங்கள் அவரை ரியல் ஹீரோவாக பார்க்க ஆரம்பித்தோம். தற்போது அவரால் நாங்களும் பலனடைந்துள்ளோம். எங்களின் ஏழ்மையை உணர்ந்து அவர் உடனடியாக உதவி செய்துள்ளார்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full