இறுதி சுற்று சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான ‘சூரரை போற்று திரைப்படம் ரசிகர்களின் பேராதவரை பெற்றுள்ளது. பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.

இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும்.ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம். இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம்.கொரோனா பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் திரைப்படம் அமேசான் Ott தலத்தில் வெளியாகி இருந்தது.

Advertisement

இருப்பினும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர் பார்புகளை பெரிதும் பூர்த்தி செய்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்து விட்டு டெக்கான் உரிமையாளர் ட்வீட் செய்துஇருந்தார். அதில், பெரும் முரண்பாடுகளில் பின்தங்கிய கிராமப்புற பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியின் அழியாத ஆவிக்கு நாடகமாக்கப்பட்டது, ஆனால் உண்மை. கனவுகளை நனவாக்கும் பைத்தியக்காரத்தனமாக இருந்த ஒரு தொழில்முனைவோரின் பகுதியை சூர்யா மிகவும் பலமாக எடுத்து சென்று இருக்கிறார். இருண்ட இந்த காலங்களில் ஒரு சரியான மற்றும் சிறந்த மேம்பட்ட கதை என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் மீண்டும் இது குறித்து ட்வீட் போட்டுள்ள ஜி ஆர் கோபிநாத். படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள எனது புத்தகம் / வாழ்க்கையின் உண்மையான உண்மைகளுக்கு இந்த திரைப்படம் உண்மையாக இல்லை என்று டெக்கனில் உள்ள ஒரு சில பள்ளி நண்பர்கள், ராணுவ நண்பர்கள் மற்றும் சகாக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சினிமா விளைவுக்காக இது கற்பனையானது என்று நான் அவர்களுக்குச்சொன்னேன் , ஆனால் ‘மசாலா’வுக்கு அடியில் நல்ல இறைச்சி இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement