#10 yearschallenge மேற்கொண்ட சூரி.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!என்ன இப்படி இருக்கார்.!

By Rajkumar · 29/1/2019

தமிழ் சினிமாவில் சீரியலில் தனது பயணத்தை துவங்கி பின்னர் திரைப்படங்களில் சிறுகதாபாத்திரத்தில் தோன்றி இன்று ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சூரி. தற்போது இவரும் #10yearschallenge-ஐ மேற்கொண்டுள்ளார்.

https://twitter.com/sooriofficial/status/1090163175389986817

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'வெண்ணிலா கபடி குழு'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்றுடன் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. 

இதையும் பாருங்க : சன் டிவி தொடரில் நடித்த காமெடி நடிகர் சூரியை பார்த்திருக்கிறீர்களா ..!வெளியான புகைப்படம்..! 

இப்படத்தின் மூலமாக இயக்குநராக சுசீந்திரனும், நாயகனாக விஷ்ணு விஷாலும் அறிமுகமானார்கள். 10 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து மிகவும் நெகிழ்வுடன் கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

இதே படத்தில் தான் காமெடி நடிகர் சூரியும் ஒரு நகைசுவை நடிகராக மக்களுக்கு பரீட்சையமானார். இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரும் வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் 10 ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு சூரி தனது பழைய புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full