இப்படி செய்யறவங்க என் ரசிகராக இருக்க தகுதி இல்லாதவர்கள் - கோபத்தில் நடிகர் சூரி சொன்ன விஷயம்

By subhashini · 17/5/2025

மாமன் படத்தின் ரிலீஸ் இயருக்கு பிறகு சூரிய அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் சூரி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படம் தாய்மாமன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று சூரி உ டைய ரசிகர்கள் சில பேர் மண் சோறு எல்லாம் சாப்பிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இதை கண்டித்து சூரி அளித்த பேட்டியில், இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று என்னுடைய ரசிகர்கள் மனசோறு சாப்பிட்டு இருந்தார்கள்.

மாமன் படம்:

இது ரொம்ப முட்டாள்தனமானது. என்னை ஆச்சரியப்படுத்தனும், என் படம் நல்லா ஓடணும் என்று ஒரு விஷயத்தை செய்கிறீர்கள். ஒரு படத்தோட கதை நன்றாக இருந்தால் அந்த படம் கண்டிப்பாக நன்றாக ஓடும். மண்சோறு சாப்பிட்டால் படம் ஓட போகுதா? இந்த காசுக்கு நீங்கள், சிலருக்கு தண்ணீர் வாங்கி கொடுத்திருக்கலாம், சாப்பாடு கொடுத்திருக்கலாம். இந்த மாதிரியான விஷயங்கள் செய்பவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருப்பதற்கு தகுதியே இல்லாதவர்கள்.

சூரி பேட்டி:

நான் உணவை ரொம்ப மதிப்பவன். நான் உணவுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன். கடினமாக உழைப்புக்கு பிறகுதான் மக்கள் என்னை இங்கு கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அந்த சாப்பாட்டுக்கு மரியாதை கொடுக்கவே இல்லை. தவறான செயலைப் பண்ணி என்னை கஷ்டப்படுத்தாதீர்கள். நல்ல படங்களை பாருங்க, கொண்டாடுங்க. உங்களுக்கும் வாழ்க்கை இருக்கு, அதையும் பாருங்க. இந்த படத்தை பார்த்த மக்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

https://www.youtube.com/watch?v=T9etUtqcEyA

ரசிகர்கள் செய்தது:

நிறைய பேர் அழுதார்கள். படம் முடித்து எல்லோரும் கைதட்டினால் அதுதான் படத்திற்கான மரியாதை என்று நினைக்கிறேன். அந்த வகையில் மாமன் படத்தை பார்த்த மக்களும் கைத்தட்டினார்கள். பெண்கள் ஒவ்வொருத்தரும் அவர்களை இந்த படத்தோடு கனெக்ட் செய்து கொண்டார்கள். எதற்காக இந்த படத்தை இயக்குனர் எடுத்தாரோ அது சேர வேண்டியவர்களுக்கு சரியாக சேர்ந்து விட்டது. இன்னும் எல்லா உறவுகளும் குடும்பங்களும் இந்த படத்தை கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

கதைக்களம்:

படத்தில் சூரியின் அக்கா தான் சுவாசிகா. இவருக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் கடந்துமே கர்ப்பமாகவில்லை. இதனால் ஊரில் உள்ள அனைவருமே சூரியின் அக்காவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் முதல் முறையாக சுவாசிகா கர்ப்பம் ஆகிறார். இதனால் சூரி தன் அக்காவை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அதன் பின் ஆண் குழந்தையும் பிறக்கிறது. தனக்கு மருமகன் பிறந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் தன்னுடைய ஒட்டுமொத்த அன்பையுமே
சூரி தன்னுடைய மருமகனுக்கு கொடுக்கிறார். காலையில் எழுந்து அவனை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்புவது, அவனை தூங்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது என பெற்றோர்கள் செய்ய வேண்டிய அனைத்து வேலையுமே சூரி செய்கிறார். இந்த சூழ்நிலையில் தான் சூரிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகும் சூரியை விட்டு அவருடைய மருமகன் பிரியாமல் கூடவே இருக்கிறார். ஆரம்பத்தில் இதை ஐஸ்வர்யா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்து சண்டை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவருமே பிரிய முடிவே எடுக்கிறார்கள். இதனால் உறவுகள் இடையே விரிசல் ஏற்படுகிறது. மீண்டும் அந்த உறவுகள் இணைந்ததா? சூரி- ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full