கோலிவுட்டில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சூரியின் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் விவேக், சந்தானத்திற்கு பிறகு காமெடியில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சீரியலில் தான் நடிகராகவும் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான். அந்த படத்தில் இவர் புரோட்டா சாப்பிட்டதன் மூலம் தான் புரோட்டா சூரி என்றே பெயர் வந்தது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். பின் ஹீரோவாக சமீப காலமாக கலக்கி வருகிறார்.

Advertisement

சூரி திரைப்பயணம்:

அந்த வகையில் சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விடுதலை படம்:

மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே இந்த படத்தை கண்டு மகிழ்ந்து இருந்தார்கள். தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து சூரியின் விடுதலை 2 படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement

நடிகர் சூரி நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து இந்த கொட்டுக்காளி என்ற படத்தில் சூரி நடித்து இருக்கிறார். இதனை அடுத்து ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ஏழு கடல் ஏழுமலை என்ற படத்தில் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதை தொடர்ந்து கருடன் என்ற படத்திலும் கமிட்டாகி சூரி நடித்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தினுடைய வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி விடுதலை படத்தை தொடர்ந்து சூரி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை பிரமாதமாக தொடங்கி இருக்கிறார்.

Advertisement

நடிகர் சூரி வாங்கும் சம்பளம் :

இந்த நிலையில் கோலிவுட்டில் நடிகர் சூரி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, ஒரு படத்தில் நடிக்க சூரி அவர்கள் 7 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சூரி முன்னேறி இருப்பதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .

Advertisement