கோலிவுட்டில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சூரியின் முன்னாள் முதலாளி லைட்ஸ்மேன் நடராஜனை பற்றிய வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் விவேக், சந்தானத்திற்கு பிறகு காமெடியில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருந்தார். சீரியலில் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர், 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நினைவிருக்கும் வரை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தான். அந்தப் படத்தில் இவர் பரோட்டா சாப்பிட்டதன் மூலம் தான் ‘பரோட்டா சூரி’ என்றே பெயர் வந்தது. சமீபத்தில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘விடுதலை’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இசை நிகழ்ச்சியில் சூரி:

கடந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ப’ சீசன் 3 இசை நிகழ்ச்சியில் நடிகர் சூரி சிஎப் கெஸ்டாக அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரை சர்ப்ரைஸ் பண்ணும் விதமாக அவரது முன்னாள் முதலாளியான லைட்ஸ்மேன் நடராஜனை மேடைக்கு அழைத்தனர். லைட்ஸ்மேன் நடராஜன் ஜீ தமிழ் செட்டில் பல ஆண்டுகளாக பணி புரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாளியை கண்டு நெகிழ்ந்த சூரி:

அதனைத் தொடர்ந்து தனது முன்னாள் முதலாளியை கண்டு நெகிழ்ந்து போன நடிகர் சூரி,” தனக்கு பேச வார்த்தையே வரவில்லை என்றும், வாழ்க்கையில் நாம் ஒருவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருப்போம்.ஆனால், அது தள்ளிக் கொண்டே போயிருக்கும். எனக்கு என் முதலாளிக்கு நன்றி சொல்ல இந்த மேடை சரியான இடம்” என்று கண்கள் கலங்க கூறியிருந்தார்.

Advertisement

மேலும், இந்த தருணம் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது எனவும், மிகப்பெரிய வி.வி.ஐ.பி இந்த மேடைக்கு வந்திருந்தால் கூட இப்படி சந்தோஷப்பட்டு இருக்க மாட்டேன் என்றும் கூறினார். ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் முயற்சி செய்யும்போது பல தருணங்களில் திரும்ப ஊருக்கே போயிடலாம் என்று துவண்டு போன போதெல்லாம், “வேண்டாம் என்று அசிஸ்டன்ட் வேலையும் கொடுத்து சம்பளம் கொடுத்தவர் இந்த நடராஜன் அண்ணன் தான்” என்று நெகிழ்த்தார் சூரி.

Advertisement

நன்றி மறக்காத சூரி :

பின்னர் நேர்காணல் ஒன்றில் பேசிய லைட்ஸ்மேன் நடராஜன், சூரி மிகப்பெரிய உழைப்பாளி, 1990 இல் என்னிடம் வெறும் 70 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார் என்றார். மேலும், ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு போன் செய்து பேசியதோடு, சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு துணிகளும், கையில் 50 ஆயிரம் ரூபாயும் வேண்டாம் என்று சொல்லியும் கட்டாயப்படுத்தி தன்னிடம் கொடுத்தார் என்றும் தெரிவித்திருந்தார். இதுபோல் நன்றி மறக்காமல் இருக்கும் நடிகர் சூரி இப்போது கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 போன்ற படங்களில் பிசியாக உள்ளார்.

Advertisement