சீரும் சிறப்பாக நடந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் பஞ்சமி மகன்களின் காதணி விழா - சொன்ன வாக்கை காப்பாற்றிய நடிகர் சூரி

By subhashini · 24/5/2025

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும், சமீபகாலமாக சீரியல்களை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது.
குறிப்பாக, டான்ஸ் நிகழ்ச்சிகள் பல சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சி சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் நிகழ்ச்சி என்று சொல்லலாம்.

தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் 3 நிகழ்ச்சியில் நடுவராக வரலட்சுமி சரத்குமார் இருக்கிறார். இவருடன் சினேகா, வரலக்ஷ்மி சரத்குமார், பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. 24 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் பல போட்டியாளர்கள் நடுவர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார்கள்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் 4:

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமாகி இருப்பவர் பஞ்சமி. இவர் மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து 3 மகன்களுக்கு தாயாக இருக்கிறார்கள். இந்த வயதிலும் இவர் விடாமுயற்சியினால் சூப்பராக நடனமாடி வருகிறார். ஒவ்வொரு வாரமும் இவருடைய நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் நடுவர்கள் மத்தியிலும் பாராட்டுகள் தான் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மாமன் படத்தின் ப்ரமோஷனுக்காக சூரி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.

https://www.youtube.com/watch?v=iXvjxlHIN9A

பஞ்சமி சொன்னது:

அப்போது பஞ்சமி நிகழ்ச்சியில் தன்னுடைய மகன்களுக்கு இன்னும் மொட்டை அடித்து காது குத்த வில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை சொல்லி அழுது இருந்தார். உடனே சூரி, நான் உங்கள் பிள்ளைகளுக்கு மாமனாக இருந்து காதணி விழா நடத்தி வைக்கிறேன் என்று நிகழ்ச்சியில் சொன்னார். மேலும்,
தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக பஞ்சமியின் உடைய மூன்று மகன்களுக்குமே மாமனாக இருந்து காதுகுத்தும் நிகழ்ச்சியை சூரி சிறப்பாக செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சீர்வரிசையும் கொண்டு வந்திருக்கிறார். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சூரி, மாமன் படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.

காதணி விழா நடத்திய சூரி:

மிகப்பெரிய ஒரு வெற்றியாக அமைந்திருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாகவே இருக்கிறது. இதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் மாமன் படத்தின் பிரமோஷனுக்காக ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது பஞ்சமியின் உடைய நடனத்தை பார்த்தோம். ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட்டத்தை என் தங்கை சந்தித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவ்வளவு பேருக்கு என் தங்கச்சியை தெரிகிறது. அதன் பின் அவரிடம் நான் பேசினேன். அப்போது அவர், தன் மூன்று பசங்களுக்கு காது குத்தாதது பற்றி சொன்னார்.

சூரி பேட்டி:

மூன்று பேருக்கும் காது குத்து செய்வது தான் தன்னோட கனவுன்னு சொன்னார். அந்த மேடையில் கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று சொன்னோம். சொன்னதை செய்து விட்டோம். அந்த பசங்களுக்கு தாய் மாமன் இருக்கான். இருந்தாலும் அந்த மூன்று குழந்தைகளுக்கும் எங்கள் தலைமையில் காதுக்குத்தினோம். எல்லார் வீட்டிலும் சில பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் சினிமாவில் இருப்பதால் பயங்கரமாக வெளியில் தெரிகிறது. அதைவிட பயங்கரமான பிரச்சனை எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது. அதுவும் நல்லபடியாக தீர்க்கப்பட்டால் சந்தோஷம். நல்லா வேண்டிக் கொள்ளுங்கள், யாரும் சண்டை போட்டு பிரிய வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full