உள்ளே சென்ற உடனே குரலால் கேலிக்கு உள்ளான சௌந்தர்யா - பாவம்ங்க இவங்க

By Rajkumar · 7/10/2024

பிக் பாஸ் 8 சீசனில் முதல் நாளே, போட்டியாளர் ஒருவரை மற்ற போட்டியாளர்கள் குரல் கேலி செய்திருக்கும் வீடியோக்கள் தான் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. கடந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால், கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது instagram பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.

இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின்னர் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார் என்று சேனல் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8:

அந்த வகையில் நேற்று போட்டியாளர்களின் அறிமுக விழா நடைபெற்றது. இந்த முறை போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றைக் கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபிக் கிடைக்கும் என விஜய் சேதுபதி அனைவரையும் வாழ்த்தி உள்ளே அனுப்பினார். அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு, பாய்ஸ் ஒருபுறம், கேர்ள்ஸ் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் முதல் வாரம் ஜாலியாக இருக்கும். சில சமயங்களில் முதல் வாரம் எலிமினேஷனும் இருக்காது. ஆனால் இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியாளர் சௌந்தர்யா:

இந்நிலையில் இந்த சீசனின் பதினோராவது போட்டியாளராக மாடல் அழகி சௌந்தர்யா நஞ்சுண்டனை விஜய் சேதுபதி அறிமுகம் செய்தார். இவரை instagramல் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இவர் ஆஹா ஓட்டிட்டு தளத்தில் ஒளிபரப்பான 'வேற மாதிரி ஆபீஸ்' நிகழ்ச்சியில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். கடந்த சீசனில் இறுதிவரை போட்டியாளராக இருந்த விஷ்ணுவின் நெருங்க தோழி சௌந்தர்யா ஆவார்.

சௌந்தர்யாவின் குரல்:

மேலும், சௌந்தர்யாவின் குரல் சிறிது கனீர் என்று இருப்பது நாம் அறிந்ததே. அறிமுக விழாவில் விஜய் சேதுபதியிடம் தனது குரல் குறித்து சௌந்தர்யா கேட்டிருந்தார். அதற்கு உன் குரலுக்கு என்னம்மா ரொம்ப நல்லா இருக்கு, இனிமை என்பது குரலில் இருக்கணும் என்பது அவசியம் இல்லை. குணத்தில் தான் இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதி சௌந்தர்யாவிடம் கூறியிருந்தார்.

ட்ரோல் செய்த சகப் போட்டியாளர்கள் :

அதனை தொடர்ந்து , சௌந்தர்யா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற உடனே போட்டியாளர் சாச்சனா, சௌந்தர்யாவின் குரலை கேட்டு விட்டு, உங்களுக்கு சளி பிடித்திருக்கிறதா என்று கேட்டார். அதற்கு சௌந்தர்யா என் வாய்ஸே இப்படித்தான் என்று பதில் அளிக்கின்றார். மேலும், போட்டியாளர் தர்ஷிகாவும் சௌந்தர்யாவிடம், உன் வாய்ஸே ஒரு மாதிரி தான் இருக்கு. பொம்பள குரலில் பேசு என்று கூறியிருந்தார். தற்போது சௌந்தர்யாவை இப்படி சக போட்டியாளர்கள் கிண்டல் செய்யும் வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full