18 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த சக்ஸஸ் - சூப்பர் ஸ்டார் மகள் எமோஷனல்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித் லவ். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை மதன் என்பவர் இயக்கி இருக்கிறார். அபிஷன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தது.
அதேபோல் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் நன்றாக வந்திருக்கிறது. முதல் படத்திலேயே அபிஷன் தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இயக்குனராக ஹிட் கொடுத்து நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் வரிசையில் அபிஷனும் இடம்பிடிப்பார். மொத்தத்தில் இந்த ஆண்டின் ஒரு பீல் குட் படமாக வித் லவ் இருக்கிறது.
வித் லவ் படம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் பட குழுவினர் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது இந்த விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை கூட இந்த உணர்வுக்கு சரியாக இருக்காது. ப்ரீமியர் சோவில் அப்பா இந்த படத்தை பார்த்திருந்தார்.
https://www.youtube.com/watch?v=aaUmEyBoGCw
சக்ஸஸ் மீட்:
அப்பா தான் அடுத்த கட்டத்திற்கு இந்த படத்தை எடுத்து சென்று விட்டார். படம் முடிந்ததும் வீட்டிற்கு சென்றபோது அப்பா, அம்மா இருவரும் என்னை கட்டிப்பிடித்து சிரித்தார்கள். அப்போதுதான் இது சக்சஸ் என்று உணர்ந்தேன். அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன். 16-18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும் இந்த படத்தின் மூலமாகத்தான் வெற்றி என்பது உண்மையான அர்த்தம் புரிந்தது. இதுதான் முதல் சக்சஸ் மீட்.
சௌந்தர்யா சொன்னது:
அபி எனக்கு ஒரு பேபி பிரதர். அந்த மனதில் இருந்து வரும் சிரிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் இங்கே நீண்ட காலம் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனஸ்வராவை பார்த்து, எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாள் என்று கேட்கத் தோன்றுகிறது. இந்த படத்தில் அவர் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார். இயக்குனர் மதன் கதை சொன்ன போது இது வெற்றி படம் ஆகும் என்று நம்பிக்கை வந்தது. அவரின் அடுத்த படத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தங்கள் படமாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அனைவருக்குமே ரொம்ப நன்றி என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.