பிரார்த்தனைகள் வீன் போகவில்லை - கொரோனாவில் இருந்து மீண்ட எஸ் பி பி.
பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ் பி பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளாராம். பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
https://www.instagram.com/p/CEMYmBqho4s/
பாடகர் எஸ் பி பிக்கு திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்து இருந்தது. அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து அவரது நிலை நாளுக்கு நாள் மோசமானது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிராத்தனை செய்து வந்தனர். மேலும், #Prayforspb என்ற ஹேஷ் டேக்கை கூட உருவாக்கி எஸ் பி பிகாக ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு வந்தனர். மேலும், எஸ் பி பியின் மகன் எஸ் பி சரண் கூட தனது தந்தையின் நிலை குறித்து அடிக்கடி தகவல் அளித்து வந்தார்.
https://twitter.com/onlynikil/status/1297767299219369984
மேலும், சமீபத்தில் எஸ் பி அபாய கட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும் இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாடகர் எஸ் பி பி கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதாக பி ஆர் ஓ நிகில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் பல்வேறு தரப்பினரின் பிரார்த்தனை நிறைவேறியுள்ளது.