சற்று முன் எஸ் பி பி வீட்டில் நடந்த சோகம்.! கண்ணீரில் தத்தளிக்கும் குடும்ப நபர்கள்.!

By Rajkumar · 4/2/2019


தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய்,அஜித் வரை அணைத்து முன்னனி ஹீரோக்களுக்கு பின்னணி பாடலை பாடியவர் எஸ் பிபாலசுப்ரமணியம் . திரையுலகில் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுகளையும் பெற்றவர். கடைசியாக இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலையும் பாடியவர்.
இப்போது இவரது வீட்டில் ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது.

இதையும் படியுங்க : நாய்க்கு பேனர் வைக்கிறார்கள்.! பின்னணி பாடகர் எஸ் பி பியின் பேச்சால் சர்ச்சை.! 

எஸ் பி பியின் தாயார் சகுந்தலாம்மா இன்று (பிப்ரவரி 4 ) அதிகாலை மரணமடைந்தார். எஸ்.பி.பியின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள நகரியில் அவர் வசித்துப் வந்தார் சகுந்தலாம்மா. 83 வயதான அவர் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.  

தனது தாயின் மறைவு செய்தியை கேட்டு தற்போது லண்டனில் இருந்து விரைந்துள்ளார் எஸ் பி பி. சகுந்தலாம்மா இறுதி சடங்கு நாளை (பிப்ரவரி 5) எஸ் பி பியின் சொந்த ஊரான நெல்லூரில் நடைபெற உள்ளது. இந்த இறுதி சடங்கில் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full