எனக்கு பாடுவதற்கு வாய்ப்புகள் வரவில்லை என்று எஸ்பிபி சரண் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். இவர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். பாடகர் எஸ்பிபி அவர்கள் 2020ஆம் ஆண்டு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார்.

இவருடைய இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மேலும், பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மகன் தான் சரண். இவர் திரைப்பட நடிகர், பின்னணி பாடகர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் முதலில் தெலுங்கு மற்றும் தமிழில் பின்னணி பாடகராக பணியாற்றியிருந்தார். அதற்கு பிறகு தான் இவர் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Advertisement

எஸ்பிபி சரண் திரைப்பயணம்:

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்தார். சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி முடிவடைந்தது. மேலும், இவர் சினிமா துறையில் பாடகராக அறிமுகமாகி 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

எஸ்பிபி சரண் இசை அமைத்த படம்:

தற்போது துல்கர் சல்மான் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகியுள்ள சீதா ராமம் படத்தில் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் எஸ்பிபி சரண் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, மெலோடி பாடல்களை மட்டுமே மக்கள் நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக் கொள்கின்றனர். ஸ்பீட் பீட் பாடல்களை சினிமா ரிலீஸ் ஆகும்போது ரசித்து விட்டு பின்னர் மறந்துவிடுகின்றனர்.

Advertisement

எஸ்பிபி சரண் அளித்த பேட்டி:

நான் அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறேன். ஒரு காலத்தில் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. நான் பாடிய பாடல்களும் நல்ல ஹிட் கொடுத்திருந்தது. ரசிகர்களும் நன்றாகவே என்னுடைய பாடலுக்கு ஆதரவு அளித்து வந்தார்கள். ஆனால், அதன் பிறகு எனக்கு வாய்ப்புகள் வரவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை.

Advertisement

சினிமா வாய்ப்பு குறித்து எஸ்பிபி சரண் சொன்னது:

என்னால் பாட முடியாது என்று எப்போதும் கூறியதில்லை. அழைப்பு வந்தால் உடனே இங்கு வந்து விடுவேன். இருந்தாலும், எனக்கு ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி ஆகவே எனக்கு இருக்கிறது. தற்போது தமிழில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன். கூடிய விரைவில் அதற்கான அறிவுப்புகள் எல்லாம் வெளியாகும் என்று கூறியிருந்தார். இப்படி எஸ்பிபி சரண் அளித்திருந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

Advertisement