அப்பாவ தயவு செஞ்சி விட்ருங்க - AI குரலை வைத்து வரும் பாடல்கள் குறித்து சரண் ஆதங்கம்
இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ்பி பாலசுப்ரமணியன். இவர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். பாடகர் எஸ்பிபி 2020ஆம் ஆண்டு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மேலும், பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மகன் தான் சரண். இவர் திரைப்பட நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார்.
இவர் முதலில் தெலுங்கு மற்றும் தமிழில் பின்னணி பாடகராக பணியாற்றியிருந்தார். அதற்கு பிறகு தான் இவர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும், இவர் சினிமா துறையில் பாடகராக அறிமுகமாகி 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
தற்போது இவர் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
சரண் குறித்த தகவல்:
இது ஜூனியருக்கான பாடல் நிகழ்ச்சி. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் எஸ்பி சரண், நான் ரொம்ப லக்கி என்று நினைக்கிறேன். எனக்கு சின்ன பசங்களுக்கான நடுவராக இருக்கிறேன். நாம கஷ்டம்னு நினைக்கிற நிறைய பாடல்களை குழந்தைகள் எடுத்து சூப்பராக பாடினார்கள். அது நமக்கு இன்ஸ்பியர். தொடர்ந்து நாமளும் அப்படி அந்த மாதிரி பாடல்கள் பாட ஆசை ஏற்படுகிறது. குழந்தைகளிடம் நிறைய கதைகள் இருக்கிறது.
சரண் பேட்டி:
அவங்களுடைய வயது மீறி பர்பாம் செய்கிறார்கள். அவர்கள் பாடுவதை கேட்டு என்ஜாய் பண்ணாமல் இருக்க முடியாது. இங்கு ஒரு பையனுக்கு பேசும்போது திக்குகிறது. ஆனால், அவனால் தொடர்ந்து பேசவே முடியவில்லை. ஆனால் பாடும்போது அந்த பிரச்சனையே இல்லை. நான் ஒரு கேள்வி கேட்கிறேன், நீ அதுக்கு பாட்டாவே பதில் சொல்லு என்று சொல்லி அவனை ட்ரை பண்ண சொன்னபோது அவன் பாட்டு மூலமாக அழகாக பதில் சொன்னால் நான் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை. எனக்கு கேள்வி ஞானம் தான். அதனால் குழந்தைகள் பாடும் போது அவர்களுக்கு புரியிற மாதிரி பிழைகளை சுட்டிக்காட்டி அவர்களை வழிநடத்தி அந்த நிகழ்ச்சிகளை என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
எஸ்பிபி குறித்து சொன்னது:
மேலும், அப்பாவுடைய குரலை ஏஐ மூலம் பயன்படுத்த நிறைய பேர் கேட்டு வருகிறார்கள். ஒவ்வொரு பாடல்களுக்கும் பல்லாயிரம் பாடல்களை பாடியவர்கள். அவர்களை அப்படியே விட்டுடனும். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வகையில் இப்பவும் மக்கள் மனதில் இருக்கும். ஒரு டெக்னாலஜி கையில் இருப்பதினால் இது பண்ணலாமா? இப்போ SPB இருந்தார் என்றால், எடுத்துக்காட்டுக்கு 'மனசிலாயோ' பாடல் பாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தால், இது எனக்கு வேண்டாமே நான் பாட மாட்டேன் என்று கூட சொல்லி இருக்கலாம்.
https://www.youtube.com/watch?v=H_UfjeGPJco
AI குறித்து சொன்னது:
ஒரு பாடகருக்கு அந்த பாட்டை பாட வேண்டுமா, இல்லை வேண்டாமா என்று முடிவு செய்வதற்கான ரைட்ஸ் இருக்கிறது. ஆனால், AI ல நீங்க அந்த பாடகருக்கு அந்த வாய்ப்பை கொடுக்க மாட்டேங்கிறீங்க. அவங்க மேல இருக்கிற ஒரு அன்பால் எல்லா பாட்டையும் SPB சார் மற்றும் வாசுதேவன் சார் பாடலாம் என்று சொன்னால் அது சரி கிடையாது. அந்த மாதிரி செய்வதன் மூலம் அவங்க குரலை நீங்க கொண்டு வரலாம். ஆனால், எமோஷனை கொண்டுவர முடியாது. நிறைய பேரு எங்க கிட்ட கூட வந்து, அப்பாவோட வாய்ஸ் AI மூலம் பண்ணலாமா என்று கேட்கிறார்கள். நான் அப்பாவை தயவு செய்து விட்ருங்க என்று சொல்லிட்டேன். அவர் ஒரு இடத்தில் இருக்கிறார். அவர் அங்கேயே இருக்கட்டும்.