இந்தியன் படத்தில் கமலுக்கு டப்பிங் கொடுத்துள்ள SPB - இதுநாள் வரை இந்த காட்சிகளை நோட் பண்ணீங்களா?

By subhashini · 3/7/2024

இந்தியன் படத்தில் கமலுக்காக எஸ்பிபி குரல் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன். இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘இந்தியன்'.

இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, கஸ்தூரி, நிழல்கள் ரவி , அஜய்ரத்னம் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இந்நிலையில் இந்தியன் படத்தில் கமலுக்காக எஸ்பிபி குரல் கொடுத்திருக்கும் பதிவு தகவல் தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்தியன் படத்தில் இரண்டு இடத்தில் கமலுக்காக எஸ்பிபி குரல் கொடுத்திருக்கிறார்.

எஸ்பிபி குரல்:

ஒன்று கவுண்டமணிக்கு நாய் கடித்து இருக்கும்போது, அங்க ஏன்டா காமிச்சா என்று பேசியிருப்பார். இன்னொன்று ஊர்மிளா அறிமுகக் காட்சியின்போது தூக்கிப் பார்த்து வெயிட் சொல்லும் இடத்தில் வரும். இது நாள் வரைக்கும் இது பலரும் அறிந்திராத ஒன்றுதான். கமல் இல்லாததனால் தான் எஸ்பிபி வைத்து டப்பிங் செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

இந்தியன் 2 படம்:

மேலும், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2’ படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ரகுல் பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். படம் எடுக்கும் போதே பல சர்ச்சைகள்.

படம் குறித்த தகவல்:

இதனால் சிறிய இடைவெளிக்கு பின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து இருந்தார்கள். அதில் 8 பேர் படுகாயமடைந்து இருந்தார்கள். இதனால் மீண்டும் படப்பிடிப்பு நின்று விட்டது. இப்படி பல பிரச்சனைகளின் நடுவில் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கி இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

படத்தின் ரீலிஸ் தேதி:

கடந்த வாரம் இந்த படத்தினுடைய பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அனைவர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'இந்தியன் 2' படம் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு சில தினங்களுக்கு முன் ‘இந்தியன் 2’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. 'தசாவதாரம்' படத்தைப் போல கமல் இப்படத்தில் பல தோற்றங்களில் நடித்துள்ளார் என்று தெரிகிறது.

behindtalkies AMP · Quick view
View full