உனக்கு தைரியம் இருந்தா மோதி பாரு - ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த் , பின்னணி இது தான்

உனக்கு தைரியம் இருந்தா மோதி பாரு - ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த் , பின்னணி இது தான்

By subhashini · 20/6/2026

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு நடந்தது அனைவரும் அறிந்தது. இந்த தகராறில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதோடு ஹர்பஜனுக்கு எட்டு போட்டிகள் விளையாட தடையும் விதிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஹர்பஜன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதை அடுத்து கடந்த ஆண்டு இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து மீண்டும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். அதன் பின் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹர்பஜன் சிங் சமீபத்தில் ஒரு விளம்பரத்திலும் நடித்திருந்தார். இதனால் அவருக்கும் ஸ்ரீ சாந்த்துக்கும் இடையிலான பழைய பகை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் சர்ச்சை:

இது தொடர்பாக சோசியல் மீடியாவிலும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஸ்ரீசாந்த் பேட்டி எடுத்திருந்தார். அப்போது அவரிடம் அவரும் ஹர்பஜன் சிங்கும் பாக்ஸிங் உடையில் இருக்கும் பழைய புகைப்படத்தை காட்டி இருந்தார்கள். அதை பார்த்து ஸ்ரீசாந்த், ஹர்பஜனுக்கு நேரடியாகவே சவால் விடுகிறேன்.

ஸ்ரீசாந்த் பேட்டி:

பாக்ஸிங் ரிங்கில் மோதி தங்களுடைய கணக்கை தீர்த்துக்கொள்ள தயார். இதே காட்சியை நிஜத்தில் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்னுடன் பாக்ஸிங் ரிங்குக்குள் வர உங்களுக்கு துணிச்சல் உள்ளதா? ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டு உங்களால் வர முடியுமா? ஹர்பஜனிடம் தான் இதை நான் கேட்கிறேன். அதே கையுறைகளை அணிந்து என்னுடன் மோத உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இது உங்களுக்கு நான் விடுக்கும் நேரடி சவால்.

ஸ்ரீசாந்த் விட்ட சவால்:

என்னுடைய உண்மையான உணர்வுகளோடு உங்களை அழைக்கிறேன். சுயமரியாத இருந்தால் விளம்பரங்கள் செய்வதை தவிர்த்து விட்டு களத்திற்கு வாருங்கள். உங்களுக்காக காத்திருக்கிறேன் என்றெல்லாம் பேசி இருக்கிறார். இப்படி ஸ்ரீசாந்த் பேசியிருந்தது தான் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு ஹர்பஜன் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full