கையெடுத்து கும்புடுறேன், இப்படி செய்யாதீர்கள் - வேதனையில் நடிகை ஸ்ரீலீலா வைத்த வேண்டுகோள்

By subhashini · 17/12/2025

தெலுங்கு சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீலீலா. இவர் அமெரிக்காவில் பிறந்தார். ஆனால், வளர்ந்ததெல்லாம் பெங்களூரில் தான். இவர் மருத்துவம் படித்து பெங்களூரில் இருந்தாலும், இவருக்கு சிறுவயதில் இருந்து சினிமாவின் மீது அதிக ஆர்வம் என்பதால் நடிக்க வந்து விட்டார்.
இவர் 2019 ஆம் ஆண்டு கன்னட மொழி படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். இருந்தாலும், இவர் தெலுங்கில் தான் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ரவி தேஜா உடன் இவர் இணைந்து நடித்த தமாகா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து இவர் மகேஷ்பாபு, பவன் கல்யாண், நந்தமுரி பாலகிருஷ்ணா, விஜய் தேவர்கொண்டா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தமிழிலும் சில படங்களில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக சோசியல் மீடியாவில் ஸ்ரீலீலா வைத்திருக்கும் ஒரு தீவிரமான வேண்டுகோள் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்ரீலீலா குறித்த தகவல்:

அதில் அவர், தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிதாக்க வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க அதை தவறாக பயன்படுத்தக் கூடாது. சமூக ஊடங்களில் பயன்படுத்தப்படும் ஏஐ உருவாக்கிய உள்ளடக்கத்தை அனைவருமே ஊக்குவிக்க வேண்டாம். உண்மையை சொல்லி இப்படி பேசுவது எனக்கு சங்கடமாக தான் இருக்கிறது. ஆனால், இதன் பின்னணியில் உள்ள நோக்கம் நிறைவேறும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு சமூக ஊடகப் பயனரிடமும் கைகூப்பி வேண்டிக்கொள்கிறேன்.

ஸ்ரீலீலா வேண்டுகோள்:

ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட குப்பைகளை ஆதரிக்க வேண்டாம். தொழில்நுட்பத்தை நல்லதுக்கு பயன்படுத்துவது வேறு, ஆபாசத்திற்கு பயன்படுத்துவது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தொழில்நுட்பத்தால் வாழ்க்கை எளிதாக வேண்டும், கடினமாக கூடாது. ஒவ்வொரு பெண்ணும் ஒருவரின் மகள், பேத்தி, சகோதரி, தோழி. என்னுடைய பிஸியான ஷெட்யூல் காரணமாக ஆன்லைனில் என்ன நடக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை, என் நலம் விரும்பிகள் சில விஷயங்களை என் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

ஏஐ தொழில்நுட்பம் பற்றி சொன்னது:

நான் பல விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவது கிடையாது. எனக்கு என் சொந்த உலகம் இருக்கிறது. ஆனால், என் கவனத்திற்கு வந்த இந்த விஷயம் என்னை காயப்படுத்தியது. என்னுடைய சக நடிகைகளும் இதே நிலையை எதிர்கொள்கிறார்கள். அதனால் தான் அவர்கள் அனைவரின் சார்பாக உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். ஆபாச படங்களை ஊக்குவிக்க வேண்டாம். கையெழுத்து கும்பிடுகிறேன் இப்படி செய்யாதீர்கள் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full