லேடி சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லும் நயன்தாரா லேடிஸ் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுக்கல? ஸ்ரீரெட்டி ஆவேசம்

By subhashini · 5/7/2025

நயன்தாரா பற்றி நடிகை ஸ்ரீரெட்டி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருப்பவர் ஸ்ரீ ரெட்டி. இவர் தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்தவர். பின் இவர் பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார்.

தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை சாட்டி இருந்தார். மேலும், அதற்காக ‘ரெட்டி லீக்ஸ்’ என்ற போராட்டம் ஒன்றையும் துவக்கி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்தப் போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பலர் ஸ்ரீரெட்டி பகிர்ந்து இருந்தார்கள்.

ஸ்ரீரெட்டி குறித்த சர்ச்சை:

இந்த விவகாரத்தால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து ஸ்ரீரெட்டி சென்னையில் குடியேறினார். அதன் பிறகு இவர் தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுகைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார். அப்போது தெலுங்கு சினிமா பக்கம் தலை வைத்து படுக்க முடியாது என்ற நிலையிலும் தெலுங்கு சினிமா பற்றி அடிக்கடி ஏதாவது ஒன்று கூறி இருந்தார் ஸ்ரீரெட்டி.

ஸ்ரீ ரெட்டி நிலை:

அதற்குப் பின் இவருக்கு பட வாய்ப்புகளுமே கிடைக்கவில்லை. இவர் தனியாக youtube சேனல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதிலுமே இவர் கவர்ச்சியை தான் காட்டி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ஸ்ரீ ரெட்டி, சினிமாவில் முன்னேற வேண்டும் என்றால் செய்ய வேண்டியதை செய்துதான் வர வேண்டி இருக்கிறது. நான் மீடு புகார் பற்றி பேசும்போது நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் யாருமே குரல் கொடுக்கவில்லை.

ஸ்ரீ ரெட்டி பேட்டி:

போதைப் பொருள் வழக்கில் கூட வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களுக்கு தொழில், பணம், பேர், புகழ் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளும் நயன்தாரா லேடிஸ் பிரச்சினைகளுக்கு ஏன் குரலில் கொடுக்கவில்லை? புதிதாக வரும் நடிகைகளுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒரே விஷயம் தான். பெரிய நடிகர்களுடன் சண்டை போடாதீர்கள். பிரச்சனை குறித்து வெளியே சொல்லாதீர்கள். பிடிக்காவிட்டால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள். சினிமாவில் நடக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி என்னை நானே பலியிட்டு கொண்டேன்.

நயன் பற்றி சொன்னது:

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இதனால் நானே ஒரு youtube சேனல் தொடங்கினேன். கவர்ச்சியை காட்டி சமையல் செய்து கவனம் ஈர்க்கிறேன். சமையலுக்கு எதற்கு கவர்ச்சி என்று யோசிக்கலாம். வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் எனக்கு வேறு வழியே தெரியவில்லை. எனக்கு பிடிக்காத போதும் கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். youtube சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் தான் இப்போது எனக்கு கை கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full